சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : சாம்சங்கின் நியூ கேலக்ஸி ஏ70 + "||" + Vanavil : Samsung's New Galaxy A70

வானவில் : சாம்சங்கின் நியூ கேலக்ஸி ஏ70

வானவில் : சாம்சங்கின் நியூ கேலக்ஸி ஏ70
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி வரிசையில் ஏ70 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.7 அங்குல திரை உள்ளது. இதில் 4,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் விரைவாக சார்ஜ் ஆக 25 வாட் சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதன் பின்பகுதியில் 3 கேமராக்கள் உள்ளன.
64 மெகா பிக்ஸெல் திறன் கொண்டவை. முன்பகுதியில் 32 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. மிக அதிக அளவிலான மெகா பிக்ஸெல் கொண்ட ஸ்மார்ட்போன் இதுவே.

இந்த கேமராவில் நைட் மோட் வசதி உள்ளது. இதில் புகைப்படம் மட்டுமின்றி வீடியோ படங்களையும் பதிவு செய்யலாம். 6.7 அங்குல அமோலெட் தொடுதிரை உள்ள இதில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் உள்ளது.

இதில் இரண்டு வேரியன்ட்கள் வந்துள்ளன. 6 ஜி.பி. ரேம் மற்றும் 8 ஜி.பி. ரேம்களைக் கொண்டவையாக இவை வந்துள்ளன. இதில் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை ரூ.28,999. அதேசமயம் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை ரூ.30,999 ஆகும்.