வானவில் : ஒன் பிளஸ் 7 டி


வானவில் : ஒன் பிளஸ் 7 டி
x
தினத்தந்தி 9 Oct 2019 11:33 AM GMT (Updated: 9 Oct 2019 11:33 AM GMT)

ஸ்மார்ட்போன்களில் ஆப்பிள் தயாரிப்புகளுக்கு அடுத்தபடியாக மிகப் பெருமளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் நிறுவனம் ஒன் பிளஸ்.

சீனாவைச் சேர்ந்த இந்நிறுவனம் ஆண்டுக்கு ஒரு மாடல்களையும், அத்துடன் மேம்படுத்தப்பட்ட மாடலையும் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது இந்நிறுவனம் ஒன்பிளஸ் 7டி மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 6.55 அங்குல அமோலெட் திரையைக் கொண்டது.

இதில் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் உள்ளது. 8 ஜி.பி. ரேம் 128 ஜி.பி. நினைவகம் உள்ளது. இதன் பின்பகுதியில் 48 மெகா பிக்ஸெல்லுடன் 3 கேமராவைக் கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.37,999 ஆகும். முன்பகுதியில் உள்ள கேமரா 16 மெகா பிக்ஸெல்லாகும். இது செல்பி பிரியர்களுக்கு மிகுந்த உற்சாகம் அளிக்கும் விஷயமாகும்.

இதில் இரட்டை சிம் கார்டு பயன்படுத்த முடியும். திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ் இருப்பதால் மிகச் சிறந்த இசையைக் கேட்டு மகிழ முடியும்.

இதில் 3,800 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் விரைவாக சார்ஜ் ஆக 30 டி பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இது சில்வர் மற்றும் நீல நிறத்தில் வந்துள்ளது. இதில் 256 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை ரூ.39,999 ஆகும்.

Next Story