வானவில் : ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்


வானவில் : ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்
x
தினத்தந்தி 9 Oct 2019 11:45 AM GMT (Updated: 9 Oct 2019 11:45 AM GMT)

ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம் ரெட் மி என்ற பெயரில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.

‘ரெட் மி 8ஏ’ மாடல் ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் நீண்ட நேரம் செயல்பட வசதியாக 5,000 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது. அத்துடன் இது விரைவாக சார்ஜ் ஆக வசதியாக 18 வாட் டைப் சி போர்ட் வசதியும் உள்ளது. இதில் முதல் முறையாக நானோ கோட்டிங் தொழில்நுட்பம் மற்றும் கொரில்லா கிளாஸ் 5 பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 6.22 அங்குல திரையைக் கொண்டது.

இதில் 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் வந்துள்ளன. இவற்றில் 3 சிம் கார்டுகளைப் பயன்படுத்த முடியும். இது தவிர மைக்ரோ எஸ்.டி. கார்டு வசதியும் உள்ளது. இதன் மூலம் நினைவகத்தை 512 ஜி.பி. வரை நீட்டிக்க முடியும். இதில் கூடுதல் சிறப்பம்சமாக எப்.எம். ரேடியோவில் பாடல்களைக் கேட்க இயர்போனை இணைக்கத் தேவையில்லை. பாக்கெட் ரேடியோவைப் போல உங்கள் விருப்பமான சேனலில் பாடல்களையும் கேட்டு மகிழலாம். இதில் சோனி ஐ.எம்.எக்ஸ் 363. சென்சார் உடைய 12 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. பேஸ் அன்லாக் வசதி கொண்டது. இதில் 2 ஜி.பி. ரேம் கொண்ட மாடல் விலை ரூ.6,499 ஆகும். 3 ஜி.பி. ரேம் மாடல் விலை ரூ.6,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Next Story