சிறப்புக் கட்டுரைகள்

வானவில் :7-ம் தலைமுறை ஆப்பிள் ஐ-பேட் + "||" + Vanavil : 7th Generation Apple i-Pad

வானவில் :7-ம் தலைமுறை ஆப்பிள் ஐ-பேட்

வானவில் :7-ம் தலைமுறை ஆப்பிள் ஐ-பேட்
ஆப்பிள் நிறுவனம் 7-ம் தலைமுறை ஐ-பேடை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த மாதம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஐ-பேட் 10.2 அங்குலம் கொண்டதாகும். இது கடந்த வாரம்தான் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது.
ரெடினா டிஸ்பிளே எனும் நவீன தொழில்நுட்பம் கொண்டது. இது சில்வர், கிரே, தங்க நிறங்களில் கிடைக்கிறது. 32 ஜி.பி. ரேம் 128 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதன் விலை ரூ.29,900. 32 ஜி.பி. வை-பை கொண்ட மற்றொரு மாடல் ரூ.37,900.

இதில் வை-பை மற்றும் செல்போன் மாடல் விலை ரூ.40,900 மற்றும் ரூ.48,900 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது ஐ.ஓ.எஸ் 13 இயங்குதளம் கொண்டது. இதில் 8 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. முன்புறம் 1.2 பிக்ஸெல் கேமரா உள்ளது. டியூயல் மைக்ரோபோன், ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் உள்ளன. இதில் லித்தியம் பாலிமர் பேட்டரி உள்ளதால் 10 மணி நேரம் நீடிக்கும்.