வானவில் : ஒன் பிளஸ் டி.வி. 55 கியூ1


வானவில் : ஒன் பிளஸ் டி.வி. 55 கியூ1
x
தினத்தந்தி 9 Oct 2019 4:10 PM GMT (Updated: 9 Oct 2019 4:10 PM GMT)

ஸ்மார்ட்போன்களை தயாரித்து வந்த ஒன் பிளஸ் நிறுவனம் தற்போது 4 கே கியூலெட் தொழில்நுட்பத்திலான ஸ்மார்ட் டி.வி.க்களையும் தயாரிக்கத் தொடங்கியுள்ளது. 50 வாட் ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ் வசதியுடன் கூடிய இந்த டி.வி.யின் விலை ரூ.69,900 ஆகும். இரண்டு மாடல்களில் இந்நிறுவன டி.வி. வந்துள்ளது.

ஒன்பிளஸ் டி.வி. 55 கியூ 1, ஒன் பிளஸ் டி.வி.55 கியூ 1 புரோ என்ற பெயர்களில் இவை வந்துள்ளன. இரண்டு மாடலுமே 55 அங்குலம் கொண்டவையாகும். இவற்றில் 4 கே கியூலெட் பேனல் உள்ளது.

இதனால் படக்காட்சிகளின் கலர் மிகவும் துல்லியமாகத் தெரியும். ஸ்டீரியோ இசையை அளிக்க 50 வாட் ஸ்பீக்கர் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பத்துடன் இதில் உள்ளது. ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தில் செயல்படுகிறது. யூ-டியூப், பிரைம் வீடியோ, இரோஸ் நவ், ஹங்கமா, ஜியோ சினிமா, ஜீ 5 உள்ளிட்டவற்றையும் இதில் பார்க்க முடியும். டி.வி. இருப்பதே தெரியாத அளவுக்கு மிக ஸ்லிம்மாக இருப்பதோடு, சுவற்றில் மாட்டும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் கியூ 1 புரோ மாடலில் 8 ஸ்பீக்கர்கள் உள்ளன. இதன் ஊபர்கள் இசையின் அளவை மேலும் அதிகரித்துத்தர உதவுகிறது. அனைத்துக்கும் மேலாக இதன் ரிமோட்டில் மிகக் குறைவான பொத்தான்களே உள்ளன. இதன் மூலம் சிரமம் இல்லாமல் டி.வி. நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். ரிமோட்டில் லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. இதை யு.எஸ்.பி. போர்ட் மூலம் சார்ஜ் செய்ய முடியும். அதற்கும் ரிமோட்டில் வழி உள்ளது. புரோ மாடல் டி.வி. விலை ரூ.99,900 ஆகும்.

Next Story