மும்பை பங்குச்சந்தையில் தொலைத் தொடர்பு துறை குறியீட்டு எண் 4.92 சதவீதம் உயர்ந்தது


மும்பை பங்குச்சந்தையில் தொலைத் தொடர்பு துறை குறியீட்டு எண் 4.92 சதவீதம் உயர்ந்தது
x
தினத்தந்தி 10 Oct 2019 9:43 AM GMT (Updated: 10 Oct 2019 9:43 AM GMT)

மும்பை பங்குச்சந்தையில், புதன்கிழமை வர்த்தகத்தில் தொலைத் தொடர்பு துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது. எனவே அந்த துறைக்கான குறியீட்டு எண் அதிகபட்சமாக 4.92 சதவீதம் உயர்ந்தது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

வர்த்தகத்தின் இறுதியில் அந்த பங்குகளின் விலை நிலவரம் வருமாறு:-

* வோடாபோன் ஐடியா நிறுவனப் பங்கு விலை 14.06 சதவீதம் அதிகரித்து ரூ.5.84-ஆக இருந்தது.

* பார்தி ஏர்டெல் பங்கின் விலை 5.20 சதவீதம் உயர்ந்து ரூ.359.25-க்கு கைமாறியது.

* ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்கு விலை 4.05 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.0.77-ல் முடிவுற்றது.

* பார்தி இன்ப்ராடெல் பங்கின் விலை 3.80 சதவீதம் முன்னேறி ரூ.255.50-ல் நிலைபெற்றது.

* ஐ.டி.ஐ. நிறுவனப் பங்கு விலை 1.10 சதவீதம் அதிகரித்து ரூ.82.80-ஆக இருந்தது.

* ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் பங்கின் விலை 0.99 சதவீதம் உயர்ந்து ரூ.142.55-க்கு கைமாறியது.

* எச்.எப்.சி.எல். பங்கு விலை 0.28 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.17.60-க்கு கைமாறியது.

அந்த நிலையில் சரிவை சந்தித்த பங்குகள் வருமாறு:-

* எம்.டி.என்.எல். நிறுவனப் பங்கின் விலை 5.76 சதவீதம் வீழ்ந்து ரூ.6.05-ல் முடிவுற்றது.

* ஆப்டிமஸ் இன்ப்ராகாம் பங்கு 4.99 சதவீதம் சரிவடைந்து ரூ.33.30-க்கு விலைபோனது.

* விந்தியா டெலிலிங்க்ஸ் நிறுவனப் பங்கின் விலை 4.63 சதவீதம் குறைந்து ரூ.935.70-ல் நிலைகொண்டது.

* ஆன்மொபைல் குளோபல் பங்கு விலை 4.18 சதவீதம் இறங்கி ரூ.32.10-ல் முடிவுற்றது.


Next Story