பரஸ்பர நிதி துறை சொத்து மதிப்பில் 10 முன்னணி நிறுவனங்களின் பங்கு 83.66 சதவீதமாக அதிகரிப்பு


பரஸ்பர நிதி துறை சொத்து மதிப்பில் 10 முன்னணி நிறுவனங்களின் பங்கு 83.66 சதவீதமாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 10 Oct 2019 10:35 AM GMT (Updated: 10 Oct 2019 10:35 AM GMT)

பரஸ்பர நிதி துறை சொத்து மதிப்பில் 10 முன்னணி நிறுவனங்களின் பங்கு 83.66 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

நிர்வகிக்கும் சொத்து

பரஸ்பர நிதி நிறுவனங்கள் பல்வேறு திட்டங்கள் வாயிலாக முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுகின்றன. இந்த நிதி, நிறுவனப் பங்குகள் நிதிச்சந்தைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கடன்பத்திரங்கள் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதுவே பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து என்று அழைக்கப்படுகிறது.

இத்துறையில் ஒவ்வொரு திட்டமும் தனித்தனி சொத்து மதிப்பினை கொண்டுள்ளது. பங்கு வர்த்தகத்தில் சரிவு ஏற்படும்போதும், முதலீட்டாளர்கள் பெருமளவில் முதலீடுகளை விலக்கிக் கொள்ளும்போதும் பரஸ்பர நிதி துறையின் சொத்து மதிப்பு சரிவடைகிறது.

நடப்பு நிதி ஆண்டில், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பு ரூ.25.50 லட்சம் கோடியாக இருந்தது. செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் இந்த நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ.25.68 லட்சம் கோடியை எட்டி உள்ளது. ஆக, சொத்து மதிப்பு 0.70 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.

இந்நிலையில், பரஸ்பர நிதி துறை சொத்து மதிப்பில் 10 பெரிய நிறுவனங்களின் பங்கு (82.83 சதவீதத்தில் இருந்து) 83.66 சதவீதமாக அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதில், எச்.டீ.எப்.சி. எம்.எப். நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு அதிகபட்சமாக ரூ.3.77 லட்சம் கோடியாக உள்ளது.

ஐசிஐசிஐ புரூடென்ஷியல்

அடுத்து ஐசிஐசிஐ புரூடென்ஷியல் எம்.எப். சொத்து மதிப்பு ரூ.3.48 லட்சம் கோடியை எட்டி இருக் கிறது. எஸ்.பீ.ஐ. மியூச்சுவல் பண்டு நிர்வகிக்கும் சொத்து ரூ.3.21 லட்சம் கோடியாக உள்ளது.

Next Story