சிறப்புக் கட்டுரைகள்

வியக்க வைக்கும் தண்ணீர் ஓவியங்கள் + "||" + Amazing water paintings

வியக்க வைக்கும் தண்ணீர் ஓவியங்கள்

வியக்க வைக்கும் தண்ணீர் ஓவியங்கள்
நீங்கள் ‘வாட்டர் பெயிண்ட்’ பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘மாடர்ன் ஆர்ட்’ பற்றியும் அறிந்திருப்பீர்கள். வண்ண வில்லைகளை நீரில் நனைத்து ஓவியம் வரைவது சாதாரணமானது. ஆனால் தண்ணீரின் மீது வண்ணங்களால் ஓவியம் தீட்டுவது அரிய கலையாகும்.
தண்ணீர் ஓவியம் என்பது இந்த காலத்து புதுமையல்ல. பழங்காலத்திலேயே தண்ணீரில் ஓவியம் வரையும் முறை இருந்துள்ளது. ஹிப்ரு இனத்தவர்கள் (துருக்கியர்கள்) தண்ணீரில் ஓவியம் வரையும் முறையை அறிமுகம் செய்தனர். 13-ம் நூற்றாண்டில் இந்த ஓவியக்கலை தோன்றியது. 16-ம் நூற்றாண்டில் சிறந்து விளங்கியது. இருந்தாலும் நுட்பமான இந்த ஓவியக்கலை இடைக்காலத்தில் பிரபலமாகாமல் மறைந்து வந்தது.

தற்போது துருக்கியைச் சேர்ந்த ஓவியரான ‘காரிப் ஐ’ என்பவர் தண்ணீரில் ஓவியம் வரையும் முறையை புத்துயிர் பெறச் செய்துள்ளார். சமீப காலமாக பல்வேறு தண்ணீர் ஓவியங்களை வரைந்து இந்த கலையை உலகறியச் செய்து வருகிறார். இணையதளங்களில் வெளியிடப்படும் இவரது தண்ணீர் ஓவியங்களுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.தண்ணீரில் ஓவியங்களை வரைய சில தாவர விதைகளில் இருந்து பிரத்தியேக பசை தயாரிக்கப்படுகிறது. “டிராகன்த் கம்” எனப்படும் இந்த பசை தண்ணீரின் மேற்பரப்பில் படிந்துவிடுகிறது. பின்னர் அதன் மீது ஓவியம் தீட்டலாம். வண்ணம் தண்ணீரில் கரைந்துவிடாமல் இருக்க எருதுகளின் பித்தநீர் வண்ணக் கலவையுடன் சேர்க்கப்படுகிறது. குதிரைவால் முடியை தூரிகையாக பயன்படுத்துகிறார்கள்.

ஓவியர் காரீப் ஐ வரைந்த வான் கோ ஓவியம் மற்றும் வண்ணமயமான தண்ணீர் ஓவியத்தை இங்கே படத்தில் பார்க்கலாம்.