சிறப்புக் கட்டுரைகள்

பூக்களின் பள்ளத்தாக்கு + "||" + The Valley of Flowers

பூக்களின் பள்ளத்தாக்கு

பூக்களின் பள்ளத்தாக்கு
உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயத்தின் ஒரு பகுதியான நந்தாதேவி மலை உள்ளது. புனித தலமாக கருதப்படும் இங்கு 26 ஆயிரத்து 645 அடி (8 ஆயிரம் மீட்டர்) உயரம் உள்ள கர்வால் ஹிமாலயா சிகரம் உள்ளது. இது 1934-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இயற்கை எழில்கொஞ்சும் இந்த பகுதிக்கு பயணிகள் கூட்டம் கூட்டமாக செல்லத் தொடங்கினார்கள். ஒவ்வொரு முறையும் 10 பேர் கொண்ட ஆட்டு இடையர் குழு, 30 பேர் கொண்ட பயணிகள் குழு என மொத்தமாக பயணித்தனர். அவர்கள் நூற்றுக்கணக்கான கால்நடைகளையும் அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு மலைபோல குப்பை சேகரமானது. வனப்பகுதியும், அழகிய தாவரங்களும் அழிவைச் சந்தித்தன.

இதையடுத்து “நந்தா தேவி பயோஸ்பேர் ரிசர்வ் (NDBR)” எனும் பாதுகாக்கப்பட்ட உயிர்ச்சூழல் மண்டலமாக நந்தாதேவி மலைப்பிரதேசம் அறிவிக்கப்பட்டது. மேலும் மனிதர்கள் இங்கு செல்வதற்கும், தங்குவதற்கும் தடைவிதிக்கப்பட்டது. சுமார் 11 ஆண்டுகள் இந்த தடை இருந்தது.

போதியாஸ் என்று அழைக்கப்பட்ட இந்தோ திபெத்திய இன மக்கள், அருகில் உள்ள பகுதிகளில் வசித்தனர். அவர்கள் இந்த பகுதியை தங்கள் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தினார்கள். மேலும் மூலிகை தாவரங்களை சேகரித்து விற்பதையும் வழக்கமாக வைத்திருந்தனர். அவர்களும் அங்கு செல்வது தடுத்து நிறுத்தப்பட்டது.

2001-ம் ஆண்டில் சுற்றுச்சூழல் மாறாமல் இந்த பகுதியை சுற்றுலாத்தலமாக மாற்றும் சட்டம் கொண்டு வரப்பட்டது. போதியாஸ் மக்களும் இந்த பகுதியின் சுற்றுச்சூழலை பேண முன்வந்தனர். அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. யுனெஸ்கோ அமைப்பு இந்த பகுதியை 1988-ம் ஆண்டு உலகின் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரித்தது.

இதன் அருகிலேயே பூக்களின் பள்ளத்தாக்கு என புகழப்படும் பகுதி உள்ளது. அந்தபகுதி மக்கள் இதை நந்தன் கண்ணன் என அழைக்கிறார்கள். இதற்கு கடவுள் விளையாடும் பள்ளத்தாக்கு என்று பொருளாகும். ஆங்கிலேயே மலையேற்ற பயணியான பிராங்க் ஸ்மித் 1931-ல் இந்த பகுதியைப் பார்த்துவிட்டு பூக்களின் பள்ளத்தாக்கு என்று பெயர்சூட்டினர். அதன்பிறகு சுற்றுலா பயணிகளும் இங்கு வரத் தொடங்கினர். அதனால் குப்பைகள் சேர்ந்ததுடன் நிறைய அளவில் பூக்களும் சேதம் அடைந்தன. காலப்போக்கில் பல அரிய மலர் இனங்கள் அழிய ஆரம்பித்தன. இதனால் சுற்றுச்சூழலும் மாற ஆரம்பித்தது. 1983-ம் ஆண்டு இங்கு மனிதர்கள் பயணிக்கவும், கால்நடைகள் மேய்க்கவும், மலையேற்றம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. 2005-ம் ஆண்டு இந்தபகுதி உலகின் புராதன சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது.