வீடு தேடி குழாயில் வரும் பியர்


வீடு தேடி குழாயில் வரும் பியர்
x
தினத்தந்தி 12 Oct 2019 3:12 PM GMT (Updated: 12 Oct 2019 3:12 PM GMT)

ரஷ்யாவைச் சேர்ந்தவர் ஆண்ட்ரே எரேமீவ். இவரது நீண்ட நாள் கனவு, தன்னுடைய வீட்டு குழாயில் பியர் வரவழைக்க வேண்டும் என்பது. தன்னுடைய யோசனையைப் பலரிடம் சொன்னபோது எல்லோரும் சிரித்துவிட்டனர். ஒருநாள் அவரது குடியிருப்பின் தரைத் தளத்தில் பியர் கடை வந்தது.

கடை உரிமையாளரைச் சந்தித்து தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தினார் ஆண்ட்ரே. முதலில் கடைக்காரர் இதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அடிக்கடி ஆண்ட்ரே சொல்வதைக் கேட்ட பிறகு, சம்மதம் தெரிவித்தார். அரசாங்க அனுமதியைப் பெற்றார். 

‘‘ரஷ்யாவிலேயே சொந்தமாக பியர் பைப் லைன் வைத்திருப்பவன் நான்தான் என்று நினைக்கிறேன். நான் எதிர்பார்த்ததைவிட எல்லா வேலைகளும் மிக எளிமையாக முடிந்தன. கடையில் இருந்து மெல்லிய குழாயை என் சமையலறையில் இணைத்தேன். ஒரு குழாயில் சுடு தண்ணீர். இன்னொரு குழாயில் குளிர்ந்த நீர். மூன்றாவது குழாயில் ஜில்லென்ற பியர். 

நினைத்த நேரத்தில் புத்தம் புது பியரைப் பருக முடிகிறது. என்னுடைய கனவு நிஜமாகிவிட்டது. இதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு?’’ என்கிறார் ஆண்ட்ரே. இதற்கான செலவை மட்டும் ஒருவரிடமும் அவர் பகிர்ந்துகொள்ளவில்லை. ஆனால் செலவு செய்ததற்கு ஏற்ற பலனை அனுபவித்து வருவதாகச் சொல்லுகிறார் ஆண்ட்ரே!

# ‘டிரிங் அண்ட் டிரைவ்’ அபராதம் மிச்சம்.

Next Story