கான்கிரீட் கவ்பாய்ஸ்


கான்கிரீட் கவ்பாய்ஸ்
x
தினத்தந்தி 12 Oct 2019 3:34 PM GMT (Updated: 12 Oct 2019 3:34 PM GMT)

பிலடெல்பியாவில் ‘கான்கிரீட் கவ்பாய்ஸ்’ என்ற அமைப்பை ஆரம்பித்து நடத்தி வருகிறார்கள் ஒரு குழுவினர். பரபரப்பான கான்கிரீட் சாலைகளில் கார்கள், பேருந்துகள், இரண்டு சக்கர வாகனங்களுக்கு நடுவே, இவர்கள் குதிரைகளில் பயணம் மேற்கொள்கிறார்கள்.

குதிரை சவாரி செய்ய விரும்பும் குழந்தைகள், 5 டாலர்கள் கொடுத்தால் நீண்ட தூரம் சுற்றி வந்து, வீட்டில் இறக்கிவிடுகிறார்கள். ‘‘குழந்தைகளுக்கு குதிரை ஓட்டுவதை மட்டும் நாங்கள் சொல்லிக் கொடுப்பதில்லை. குதிரையை அக்கறையாகக் கவனித்துக்கொள்வது எப்படி, குதிரையிடம் அன்பு, கருணையோடு பொறுப்பாக நடந்துகொள்வது எப்படி என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கிறோம்.

இன்றைய குழந்தைகள் தொழில்நுட்பங்களுக்கு அடிமையாகிவிட்டனர். அவர்களிடம் சக உயிரினங்கள் மீது அன்போ, அக்கறையோ அதிகம் இருப்பதில்லை. அவர்களுக்கு விலங்குகள் பற்றியும் அவற்றைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றியும் எடுத்துரைக்கிறோம்.’’ என்கிறார் மாலிக்.

கான்கிரீட் கவ்பாய்ஸ் குறித்த ஒரு வீடியோ சமீபத்தில் சி.என்.என். தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதற்குப் பிறகு குதிரை சவாரியை அதிகமானவர்கள் விரும்ப ஆரம்பித்து விட்டனர்.


Next Story