சிறப்புக் கட்டுரைகள்

ஒரு இனத்தையே காப்பாற்றிய கொக்கு நடனம் + "||" + The crane bird dance that saved a species

ஒரு இனத்தையே காப்பாற்றிய கொக்கு நடனம்

ஒரு இனத்தையே காப்பாற்றிய கொக்கு நடனம்
அமெரிக்காவில் வசிக்கும் ஜார்ஜ் ஆர்ச்சிபல்ட், விருது பெற்ற பறவையியலாளர். அரிய வகை கொக்கு ஒன்றுக்காகத் தன் வாழ்நாளில் 3 ஆண்டுகளைச் செலவிட்டிருக்கிறார்.
1976-ம் ஆண்டு அண்டோனியோ உயிரியல் பூங்காவில் டெக்ஸ் என்ற ஒரே ஒரு பெண் கொக்கு மட்டும் இருந்தது. உலகம் முழுவதும் இருந்த 100 கொக்குகளில் இதுவும் ஒன்று.

பூங்கா நிர்வாகிகள் டெக்ஸை இனப்பெருக்கம் செய்ய வைப்பதற்கு விரும்பினார்கள். ஆனால் ஜார்ஜ் தன்னுடைய பொறுப்பில் டெக்ஸை எடுத்துக்கொண்டார். ஜார்ஜும் டெக்ஸும் மிக நெருங்கிய நண்பர்களாக மாறினார்கள். இனப்பெருக்க காலம் வந்தது. கொக்குகள் நடனமாடுவது போலவே டெக்ஸோடு சேர்ந்து நடனமாடினார் ஜார்ஜ். டெக்ஸ் மகிழ்ச்சி அடைந்தது. ஒரு முட்டை இட்டது. ஆனால் அந்த முட்டை குஞ்சு பொரிக்கும் அளவுக்கு இல்லை. அடுத்த ஆண்டு இனப்பெருக்க காலம் வரை காத்திருந்தார் ஜார்ஜ். மீண்டும் கொக்குடன் நடனமாடினார். முட்டையிட்டு, அடை காத்தது டெக்ஸ். ஆனால் முட்டையிலிருந்து இறந்த குஞ்சுதான் வெளிவந்தது. மூன்றாவது ஆண்டு மீண்டும் டெக்ஸ் முட்டை இட்டது.

இந்த முறை முட்டையை செயற்கையாக அடை காத்தனர். முட்டையிலிருந்து குஞ்சு வெளி வந்தது. அதற்கு ‘கீ விஸ்’ என்று பெயர் சூட்டினார் ஜார்ஜ். விரைவிலேயே டெக்ஸ் இறந்து போனது. ஆனால் டெக்ஸின் இனப்பெருக்கத்தால் அரிய கொக்குகள் இன்றும் உலகில் உள்ளன.

அரிய கொக்கின் இனத்தைக் காப்பாற்றி, எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்த ஜார்ஜுக்கு ஏகப்பட்ட விருதுகளும் பணமும் வழங்கப்பட்டன. கொக்கு பாதுகாப்பு மையத்தில் வேலை செய்து வரும் ஜார்ஜ் வட கொரியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், கியூபா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்து, கொக்குகளின் பாதுகாப்பை வலியுறுத்தி வருகிறார்.

# விடாமுயற்சி, விஸ்வரூப வெற்றி