சிறப்புக் கட்டுரைகள்

உர நிறுவனத்தில் வேலை + "||" + Working in a fertilizer company

உர நிறுவனத்தில் வேலை

உர நிறுவனத்தில் வேலை
மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் எனப்படும் மத்திய பொதுத் துறை உர நிறுவனம், சென்னை மணலியில் செயல்படுகிறது.
ரசாயன உரங்கள், உயிர் உரங்கள், பூச்சிக்கொல்லிகள், கரிம உரங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இந்த நிறுவனம் ஈடுபடுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் பட்டதாரி என்ஜினீயரிங் டிரெயினி/ மேனேஜ்மென்ட் டிரெயினி மற்றும் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. புரொடக்சன், கெமிஸ்ட், மார்க்கெட்டிங், சேப்டி, பெர்சனல், கமர்சியல், நிதி, ஆபரேசன்ஸ், லேப் அனலிஸ்ட், அக்கவுண்டன்ட், ஜூனியர் அசிஸ்டன்ட் போன்ற பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 93 பேர் சேர்க்கப்படுகிறார்கள். பணிப்பிரிவு வாரியான காலியிட விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.

பி.இ., பி.டெக் படித்தவர்கள், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், எம்.காம், சி.ஏ., எம்.பி.ஏ. எச்.ஆர்.எம்., பி.காம் மற்றும் கலை அறிவியல் பட்டப்படிப்புகளை படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.

டெக்னிக்கல் அசிஸ்டன்ட், லேப் அனலிஸ்ட் பணிகளுக்கு 25 வயதுக்கு உட்பட்டவர்களும், பட்டதாரிகள் தரத்திலான பணியிடங்களுக்கு 28 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

விருப்பம், உள்ளவர்கள் முழுமையான அறிவிப்பில் தாங்கள் விரும்பும் பணிக்கான முழுமையான தகுதி விவரங்களை அறிந்து கொண்டு இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் அக்டோபர் 16-ந் தேதியாகும். இது பற்றிய விவரங்களை www.madrasfert.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.