பி.எம்.டபிள்யூ.வின் எம்5 காம்படிஷன்


பி.எம்.டபிள்யூ.வின் எம்5 காம்படிஷன்
x
தினத்தந்தி 16 Oct 2019 6:59 AM GMT (Updated: 16 Oct 2019 6:59 AM GMT)

சொகுசு கார்கள் தயாரிப்பில் முன்னணியில் திகழும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் எம்5 செடான் மாடலில் மிகவும் பிரபலமான எம்5 காம்படிஷன் மாடல் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்த பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்த காரை இறக்குமதி செய்து விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. பிரீமியம் மாடலாக வெளிநாடுகளில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்த மாடலின் விலை ரூ.1.55 கோடியாகும். இது வி8 ட்வின் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜினைக் கொண்டது. இது 625 ஹெச்.பி. திறன் கொண்டது.

இது முந்தைய மாடலைக் காட்டிலும் 25 ஹெச்.பி. கூடுதலாகும். இது 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸைக் கொண்டது.

மேலும் இது நான்கு சக்கர சுழற்சியைக் கொண்டது. இதனால் ஸ்டார்ட் செய்து 3.3 வினாடிகளுக்குள் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிடும். உள்புறமும் சொகுசான சவாரியை உறுதி செய்யும் வகையிலான இருக்கைகளைக் கொண்டது. பன்முக செயல்பாடுகளைக் கொண்ட ஸ்டீரிங் வீல், ஸ்டார்ட்ஸ்டாப் பொத்தான் ஆகியவற்றோடு வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டது.

ஆப்பிள் கார்பிளே, 600 வாட் திறன் கொண்ட 16 ஸ்பீக்கர்கள் இதில் உள்ளன. 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் திரை மற்றும் 10.25 அங்குல இன்போடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டது. இந்த மாடல் மற்றொரு ஜெர்மன் காரான மெர்சிடஸ் பென்ஸ் ஏ.எம்.ஜி. இ 63 மாடலுக்கு போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Next Story