இந்திய சந்தையை கலக்க வந்துள்ள ‘பெனல்லி லியோன்சினோ 250’


இந்திய சந்தையை கலக்க வந்துள்ள ‘பெனல்லி லியோன்சினோ 250’
x
தினத்தந்தி 16 Oct 2019 7:07 AM GMT (Updated: 16 Oct 2019 7:07 AM GMT)

இத்தாலியைச் சேர்ந்த பிரீமியம் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான பெனல்லி நிறுவனம் தற்போது 250 சி.சி. பிரிவில் களமிறங்கத் திட்டமிட்டு உள்ளது.

இந்நிறுவனம் ஏற்கனவே 400 சி.சி. மற்றும் 500 சி.சி. உள்ளிட்ட பிரிவுகளில் பிரீமியம் மோட்டார் சைக்கிளை மட்டுமே அறிமுகம் செய்து வந்தது. தற்போது நடுத்தர பிரிவினரையும் ஈர்க்கும் வகையில் 250 சி.சி. திறன் கொண்ட மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. ‘பெனல்லி லியோன்சினோ 250’ என்ற பெயரில் இது அறிமுகமாகியுள்ளது.

இந்நிறுவனத்தின் ஆரம்ப நிலை மோட்டார் சைக்கிளாக இது இருக்கும். இதில் 249 சி.சி. திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் லிக்விட் கூல்டு மோட்டார் உள்ளது. 6 கியர்களைக் கொண்ட இது 25.8 ஹெச்.பி. திறனையும், 21.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையையும் வெளிப்படுத்தக் கூடியது.

தற்போதைக்கு 250 சி.சி. திறனில் எந்த ஒரு நிறுவனத்தின் மோட்டார் சைக்கிளும் இந்தியாவில் இல்லை. அந்த வகையில் பெனல்லி தயாரிப்புகள் நிச்சயம் குறிப்பிட்ட பிரிவினரின் தேவையை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் பெனல்லி மோட்டார் சைக்கிள்கள் என்றாலே விலை அதிகமானவை என்ற கருத்தை, இந்த மோட்டார் சைக்கிள் விலை நிர்ணயம் மூலம் மாற்றியிருக்கிறது இந்நிறுவனம். இதன் விலையை சுமார் ரூ.1.80 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை நிர்ணயித்து உள்ளது. உள்ளூரில் உதிரி பாகங்களைக் கொள்முதல் செய்யவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Next Story