டொயோட்டா கிளென்சா ஜி. எம்.டி.


டொயோட்டா கிளென்சா ஜி. எம்.டி.
x
தினத்தந்தி 16 Oct 2019 7:25 AM GMT (Updated: 16 Oct 2019 7:25 AM GMT)

ஜப்பானின் டொயோட்டா நிறுவனத்தின் சமீபத்திய வரவு கிளென்சா.

இது சில மாதங்களுக்கு முன்பு ஹைபிரிட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது மானுவல் டிரான்ஸ்மிஷன் மாடலாக சுமார் ரூ.6.98 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ.24 ஆயிரம் விலை குறைவாகும்.

இது பாரத் புகை விதி 6-க்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 1.2 லிட்டர் கே.12.எம். என்ஜின் உள்ளது. இது 83 ஹெச்.பி. திறனை 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையில் வெளிப்படுத்தக்கூடியது.

இதில் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய டிரைவர் இருக்கை, 7 அங்குல தொடு திரை, புளூடூத் இணைப்பு வசதி, ஆண்ட்ராய்டு ஆட்டோ இயங்குதளம், ஆப்பிள் கார்பிளே உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இரட்டை வண்ணம் கொண்ட அலாய் சக்கரங்கள் காருக்கு அழகிய தோற்றப் பொலிவை அளிக்கிறது.

கடந்த ஜூன் மாதம் அறிமுகமான கிளென்சா மாடல் இதுவரையில் 11 ஆயிரம் கார்கள் விற்பனையாகி சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தக் காருக்கு 3 ஆண்டுகள் மற்றும் ஒரு லட்சம் கி.மீ. வரையிலான இலவச பராமரிப்பு வசதியை இந்நிறுவனம் அளிக்கிறது. சுஸுகி-டொயோட்டா இரு நிறுவனங் களும் இணைந்து உருவாக்கிய மாடல் இதுவாகும்.

Next Story