வானவில்: ஏ.எஸ்.யு.எஸ். ஜென்புக் லேப்டாப்


வானவில்: ஏ.எஸ்.யு.எஸ். ஜென்புக் லேப்டாப்
x
தினத்தந்தி 16 Oct 2019 9:39 AM GMT (Updated: 16 Oct 2019 9:39 AM GMT)

மின்னணு சாதனங்கள் பிரிவில் முன்னணியில் திகழும் ஏ.எஸ்.யு.எஸ். நிறுவனம் லேப்டாப் பிரிவில் ஜென்புக் லேப்டாப்பை (15யு.எக்ஸ்534.எப்.டி.) அறிமுகம் செய்துள்ளது.

மின்னணு சாதனங்கள் பிரிவில் முன்னணியில் திகழும் ஏ.எஸ்.யு.எஸ். நிறுவனம் லேப்டாப் பிரிவில் ஜென்புக் லேப்டாப்பை (15யு.எக்ஸ்534.எப்.டி.) அறிமுகம் செய்துள்ளது. பிரீமியம் ரகப் பிரிவில் வந்துள்ள இந்த மாடல் பல சிறப்பம்சங்களைக் கொண்டது. இதன் திரை 15.6 அங்குலம் உடையது. இதில் கண்களை உறுத்தாத எப்.ஹெச்.டி. எல்.இ.டி. விளக்கு பின்திரையில் ஒளிரும். இதில் இன்டெல்கோர் ஐ78565யு பிராசஸர் உள்ளது. 16 ஜி.பி. ரேம் 1 டெராபைட் நினைவகம் கொண்டது. விளையாட்டுப் பிரியர்களுக்கென இதில் நிவிட்யா ஜி இ-போர்ஸ் ஜி.டி.எக்ஸ். 1650 மேக்ஸ் கியூ உள்ளது. இதன் எடை 1.65 கிலோவாகும்.

இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 14 மணி நேரம் செயல்படும். மிகவும் மெல்லியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 18.9 மி.மீ. தடிமன் கொண்டது. வழக்கமான லேப்டாப் கலரைப் போல் அல்லாமல் இதில் ராயல் நீலம் வண்ணம் உள்ளது இதற்கு பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது. இதன் கீழ் பகுதியில் காற்று சென்று வரும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளதால் இது எளிதில் சூடாகாது. இதில் மிகவும் முன்னேறிய ஐ.ஆர். கேமரா உள்ளது. இதன் மூலம் லேப்டாப்பை திறந்தவுடன் முக அடையாளம் மூலம் இது செயல்படும். குரல் கட்டுப்பாட்டு வசதியும் உள்ளது. முக அடையாளத்தோடு ஹலோ என்ற உங்கள் பதிவு செய்யப்பட்ட குரலைக் கேட்டு இந்த லேப்டாப் செயல்படும்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டிஜிட்டல் உதவி கருவியான கோர்டானா மற்றும் அலெக்ஸா ஆகியவற்றின் மூலமும் இதை செயல்படுத்தலாம். ஸ்பீக்கர்கள் சிறந்த இசையை வெளிப் படுத்துகிறது. அதைவிட ஹெட்போனில் கேட்பது நன்றாக உள்ளது. இதில் டியூயல் பேண்ட் வை-பை கார்டு உள்ளது. இது டேட்டா பரிமாற்றம் போன்றவற்றுக்கு மிகவும் உதவியாக உள்ளது. இதன் விலை சுமார் ரூ.1.45 லட்சமாகும்.

Next Story