வானவில்: சாம்சங் பவர்போட் வாக்குவம் கிளீனர்


வானவில்: சாம்சங் பவர்போட் வாக்குவம் கிளீனர்
x
தினத்தந்தி 16 Oct 2019 10:57 AM GMT (Updated: 16 Oct 2019 10:57 AM GMT)

வீட்டு உபயோக மின்னணு பொருட்கள் உற்பத்தியில் முன்னிலையில் உள்ள கொரியாவின் சாம்சங் நிறுவனம் வீட்டை சுத்தம் செய்யும் கருவியை தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.

வீட்டு உபயோக மின்னணு பொருட்கள் உற்பத்தியில் முன்னிலையில் உள்ள கொரியாவின் சாம்சங் நிறுவனம் வீட்டை சுத்தம் செய்யும் கருவியை தயாரித்து அறிமுகம் செய்துள்ளது. ‘பவர்போட் ஆர்7260’ என்ற பெயரில் வந்துள்ள இந்த வாக்குவம் கிளீனர், தானியங்கி முறையில் செயல்படக்கூடியது. இதில் ரோலர் பிரஷ் பயன்படுத்தப் பட்டுள்ளது. இரண்டு, மூன்று சுழற்சியிலேயே தரையை சுத்தம் செய்துவிடும். இது தானியங்கி முறையில் செயல்படக் கூடியது.

இதனால் தரையில் அழுக்குகள் உள்ள இடங்களை சுலபமாக சுத்தம் செய்துவிடும். மேலும் இதில் உள்ள ரப்பர் பிளேடு சிறிய தூசு, துரும்பு மற்றும் செல்லப் பிராணிகளின் ரோமங்களையும் உறிஞ்சிவிடும். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள சக்கரங்கள் அளவில் பெரியவை. அவை தடிமனான தரை விரிப்பிலும் உறுதியாக சென்று சுத்தம் செய்துவிடும்.

இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒன்றரை மணி நேரம் செயல்படும். குரல்வழி கட்டுப்பாட்டின் மூலமும் இதை இயக்கலாம். பிக்ஸ்பி, அமேசான் அலெக்ஸா, கூகுள் அசிஸ்ட் மூலமாகவும் இதை இயக்க முடியும். இதன் விலை சுமார் ரூ.57,500.

Next Story