இந்தியாவில் இருந்து இறக்குமதியை அதிகரிக்க மலேசியா பரிசீலனை


இந்தியாவில் இருந்து இறக்குமதியை அதிகரிக்க மலேசியா பரிசீலனை
x
தினத்தந்தி 17 Oct 2019 5:55 AM GMT (Updated: 17 Oct 2019 5:55 AM GMT)

இந்தியாவில் இருந்து சில பொருள்களின் இறக்குமதியை அதிகரிப்பது குறித்து மலேசியா பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலுக்கு மத்திய அரசு 5 சதவீத உள்நாட்டு வர்த்தக பாதுகாப்பு வரி விதித்து இருக்கிறது. இதனையடுத்து சுத்திகரித்த பாமாயில் மீதான ஒட்டுமொத்த இறக்குமதி வரி (45 சதவீதத்தில் இருந்து) 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மேலும் காஷ்மீர் விஷயத்தில் மலேசிய அதிபர் இந்தியாவை விமர்சித்ததால் அங்கிருந்து இறக்குமதியாகும் பாமாயில் மற்றும் சில பொருள்களுக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக அண்மையில் செய்தி வெளியானது.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து மூலச்சர்க்கரை மற்றும் எருமை இறைச்சி இறக்குமதியை அதிகரிப்பது குறித்து மலேசியா பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்தியாவின் வர்த்தக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தவிர்த்து விடலாம் என அந்நாடு கருதுவதாக தெரிகிறது.

சர்வதேச அளவில், சரக்கரை மற்றும் எருமை இறைச்சி உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடுகளுள் ஒன்றாக இருக்கிறது. இதே போன்று பாமாயில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தோனேஷியா முதலிடத்திலும், மலேசியா இரண்டாவது இடத்திலும் இருந்து வருகின்றன.

இந்தியாவின் ஒட்டுமொத்த தாவர எண்ணெய் இறக்குமதியில் சமையல் எண்ணெயின் பங்கு 70 சதவீதமாக உள்ளது. இதில் பாமாயிலின் பங்கு மிக அதிகமாக இருக்கிறது.

Next Story