செப்டம்பர் காலாண்டில் பெடரல் வங்கி லாபம் 52% வளர்ச்சி


செப்டம்பர் காலாண்டில் பெடரல் வங்கி லாபம் 52% வளர்ச்சி
x
தினத்தந்தி 17 Oct 2019 6:53 AM GMT (Updated: 17 Oct 2019 6:53 AM GMT)

பெடரல் வங்கி, செப்டம்பர் காலாண்டில் ரூ.425 கோடியை நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது.

சென்ற ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.280 கோடியாக இருந்தது. ஆக, நிகர லாபம் 52 சதவீதம் வளர்ச்சி கண்டிருக்கிறது.

இதே காலத்தில் இவ்வங்கியின் நிகர வட்டி வருவாய் 12 சதவீதம் உயர்ந்து ரூ.1,182 கோடியாக அதிகரித்து இருக்கிறது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.1,052 கோடியாக இருந்தது. மொத்த வாராக்கடன் (3.10 சதவீதத்தில் இருந்து) 3.06 சதவீதமாக குறைந்துள்ளது. எனினும் முந்தைய காலாண்டில் (2019 ஏப்ரல்-ஜூன்) அது 2.98 சதவீத அளவிற்கே இருந்தது. நிகர வாராக்கடன் 1.60 சதவீதமாக உள்ளது. ஜூன் காலாண்டில் அது 1.50 சதவீதமாக இருந்தது.

மும்பை பங்குச்சந்தையில், நேற்று வர்த்தகம் தொடங்கியபோது பெடரல் வங்கிப் பங்கு ரூ.86.05-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.86.80-க்கும், குறைந்தபட்சமாக ரூ.79.05-க்கும் சென்றது. இறுதியில் ரூ.82.15-ல் நிலைகொண்டது. கடந்த செவ்வாய்க்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 2.78 சதவீத சரிவாகும்.

Next Story