நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் எஸ்.பீ.ஐ. லைப் லாபம் ரூ.129 கோடி


நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் எஸ்.பீ.ஐ. லைப் லாபம் ரூ.129 கோடி
x
தினத்தந்தி 17 Oct 2019 7:40 AM GMT (Updated: 17 Oct 2019 7:40 AM GMT)

நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (2019 ஜூலை-செப்டம்பர்) எஸ்.பீ.ஐ. லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.129 கோடி லாபம் ஈட்டி இருக்கிறது.

கூட்டுத் திட்டம்
பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பீ.என்.பி. பரிபாஸ் கார்டிஃப் நிறுவனத்தின் கூட்டுத் திட்டம் எஸ்.பீ.ஐ. லைப் இன்சூரன்ஸ் ஆகும். இதில் பாரத ஸ்டேட் வங்கி 70.1 சதவீத பங்கு மூலதனம் வைத்திருக்கிறது. இதன்படி இவ்வங்கி பெரும்பான்மை பங்குதாரராக உள்ளது. பீ.என்.பி. பரிபாஸ் கார்டிப் நிறுவனத்திற்கு 26 சதவீத பங்குகள் இருக்கின்றன.

எஸ்.பீ.ஐ. லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ரூ.129 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 48 சதவீதம் உயர்வாகும். இதே காலத்தில் இந்நிறுவனம் நிர்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பு 23 சதவீதம் உயர்ந்து ரூ.1.54 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. நிதி ஆண்டின் முதல் 6 மாதங்களில் (2019 ஏப்ரல்-செப்டம்பர்) இந்நிறுவனத்தின் புதிய பிரிமிய வருவாய் 40 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.

பங்கு விலை
மும்பை பங்குச்சந்தையில், புதன்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது எஸ்.பீ.ஐ. லைப் இன்சூரன்ஸ் பங்கு ரூ.836.20-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.891.95-க்கும், குறைந்தபட்சமாக ரூ.831-க்கும் சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.877.40-ல் நிலைகொண்டது. இது, செவ்வாய்க்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 4.50 சதவீத ஏற்றமாகும்.

Next Story