சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : புகைப்படக் கலைஞர்களுக்கேற்ற கேனன் கேமராக்கள் + "||" + Rainbow: Canon cameras for photographers

வானவில் : புகைப்படக் கலைஞர்களுக்கேற்ற கேனன் கேமராக்கள்

வானவில் :  புகைப்படக் கலைஞர்களுக்கேற்ற கேனன் கேமராக்கள்
கேமராக்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள கேனன் நிறுவனம் புகைப்படக் கலைஞர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இரண்டு மாடல்களில் கேமராக்களை அறிமுகம் செய்துள்ளது.
கேனன் இ.ஓ.எஸ். 90டி, இ.ஓ.எஸ். எம்6 மார்க்2 என்ற பெயரில் இவை வெளிவந்துள்ளன. இவை இரண்டுமே மிரர்லெஸ் கேமராவாகும். இரண்டுமே 32.5 மெகா பிக்ஸெல் திறன் கொண்டவை. இதில் புளூடூத் இணைப்பு, வை-பை இணைப்பு வசதி உள்ளது.இதனால் புகைப்படம் எடுத்து அதை உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட முடியும்.

இதில் இ.ஓ.எஸ். 90டி கேமராவை கையாள்வது மிகவும் எளிது. இதில் மேம்பட்ட வியூ பைண்டர் உள்ளது. இதில் டியூயல் பிக்ஸெல் சி.எம்.ஓ.எஸ். ஆட்டோ போகஸ் தொழில்நுட்பமும், 4-கே நுட்பத்தில் வீடியோ காட்சிகளை பதிவு செய்யும் வசதியும் உள்ளது.

மற்றொரு மாடலான கேனன் இ.ஓ.எஸ். எம்6 மார்க் 2 கேமராவில் லென்ஸ்களை மாற்றிப் போட்டு பயன்படுத்தும் வசதி உள்ளது. இதில் பாஸ்ட் லாக்கிங், பாஸ்ட் டிராக்கிங் ஆட்டோ போகஸ் வசதி உள்ளது. இதில் சி.எம்.ஓ.எஸ். சென்சாரும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு கேமராக்களிலும் நிறுவனத்தின் பிரபலமான டிஜிக் 8 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் இ.ஓ.எஸ். எம் 6 கேமரா விலை சுமார் ரூ.84 ஆயிரமாகும். இ.ஓ.எஸ். 90டி மாடல் விலை சுமார் ரூ.1,27,495 ஆகும்.