சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : விவோ இஸட் 1. எக்ஸ் + "||" + Rainbow: VivoZ1X

வானவில் : விவோ இஸட் 1. எக்ஸ்

வானவில் :  விவோ இஸட் 1. எக்ஸ்
ஸ்மார்ட்போனில் இந்தியாவில் மிகவும் பிரபலமானது விவோ பிராண்ட்.
இந்நிறுவனம் 8 ஜி.பி. ரேம் வசதி கொண்ட புதிய மாடல் விவோ இஸட்1. எக்ஸ் என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. கடந்த மாதம் விவோ இஸட்1. எக்ஸ் மாடலில் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் மற்றும் 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் அறிமுகமானது. தற்போது 8 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கண்ணைக் கவரும் நீல வண்ணத்தில் இவை வெளிவந்துள்ளது. இந்த போனில் 6.38 அங்குல சூப்பர் அமோலெட் திரை உள்ளது. ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர் உள்ளது. பன்டச் இயங்குதளம் உள்ளது. இதில் 3 கேமராக்கள் உள்ளன. இவை 58 மெகா பிக்ஸெல் திறன் கொண்டவை. செல்பி பிரியர்களுக்கென 32 மெகாபிக்ஸெல் கேமராவை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.21,990 ஆகும்.

விவோ ஐக்யூ.ஓ.ஓ. நியோ
ஸ்மார்ட்போன் பிராண்டில் முன்னணியில் உள்ள விவோ நிறுவனம் ஐக்யூ.ஓ.ஓ. நியோ என்ற பெயரிலான புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து உள்ளது. இதில் ஸ்நாப்டிராகன் 855 எடிஷன் பிராசஸர் உள்ளது. இதன் முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இதன் திரை 6.39 அங்குலம் கொண்டது. 8 ஜி.பி. ரேம் கொண்டது. இதன் பின்புறம் 22 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது.

விரல் ரேகை உணர் சென்சாருடன், 4,500 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் 33 வாட் சார்ஜிங் வசதியுடன் இது வந்துள்ளது. இரட்டை சிம் கார்டு வசதியோடு, கருப்பு, வயலெட் நிறங்களில் வந்துள்ளது.