சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : தோஷிபாவின் புதிய வரவுகள் + "||" + Rainbow: Toshiba's new arrivals

வானவில் : தோஷிபாவின் புதிய வரவுகள்

வானவில் :  தோஷிபாவின் புதிய வரவுகள்
ஜப்பானிய நிறுவனமான தோஷிபா, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பல்வேறு வீட்டு உபயோக பொருட்களை அறிமுகம் செய்துள்ளது ரெப்ரிஜிரேட்டர், வாஷிங் மெஷின், நீர் சுத்திகரிப்பான் ஆகியன தோஷிபாவின் புதிய வரவுகளாகும்.
இந்நிறுவனத்தின் வாஷிங் மெஷின் விலை ரூ.13,900 முதல் ரூ.56,590 வரையாகும். இதேபோல இந்நிறுவனத்தில் ரெப்ரிஜிரேட்டர் விலை ரூ.27,490-ல் தொடங்கி ரூ.85,490 வரை உள்ளது. இதேபோல தண்ணீர் சுத்திகரிப்பான் விலை ரூ.23,990-ல் தொடங்கி ரூ.26,990 வரை உள்ளது.

வாஷிங் மெஷினில் முன்புற கதவு கொண்ட பிரன்ட் லோடிங் மாடலில் இந்நிறுவனம் கலர் அலைவ் எனும் புதிய தொழில்நுட்பத்தை புகுத்தி உள்ளது. இதன் மூலம் புதிய துணிகளை இதில் துவைக்கும்போது சாயம்போவது தடுக்கப்படும்.

இது 67 சதவீத அளவுக்கு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும். இதில் 39 சதவீத இன்வெர்ட்டர் மோட்டார் உள்ளது. இந்த மோட்டாருக்கு 10 ஆண்டு உத்தரவாதத்தை இந்நிறுவனம் அளிக்கிறது.

ரெப்ரிஜிரேட்டர் 661 லிட்டர் மற்றும் 252 லிட்டர் அளவுகளில் வெளிவந்துள்ளது. கருப்பு, நீலம், பச்சையுடன் நீலம் கலந்த வண்ணங்களில் இது விற்பனைக்கு வந்துள்ளது. டோர் ஷவர் கூலிங், ஆட்டோ ஐஸ் மேக்கர் உள்ளிட்ட வசதிகள் இதில் உள்ளன. 2 கதவுகளுடன் பிராஸ்ட் பிரீ வசதியும் கொண்டது. இந்நிறுவன தண்ணீர் சுத்திகரிப்பானில் மறு சவ்வூடு பரவல் மற்றும் அகச்சிவப்பு கதிர் வீச்சு மூலம் நீர் சுத்திகரிக்கப்படுகிறது. இதில் உள்ள அகச்சிவப்பு கதிர் காப்பு தொழில்நுட்பம் 99.99 சதவீத அளவுக்கு தண்ணீரில் கலந்துள்ள நோய்க்கிருமிகளை அழித்துவிடும். இதில் உள்ள யு.வி. விளக்கிற்கு 5 ஆண்டு உத்தரவாதம் அளிக்கிறது.