வானவில் : ஏ.எஸ்.யு.எஸ். ஜென்புக் லேப்டாப்


வானவில் :  ஏ.எஸ்.யு.எஸ். ஜென்புக் லேப்டாப்
x
தினத்தந்தி 30 Oct 2019 8:11 AM GMT (Updated: 30 Oct 2019 8:11 AM GMT)

மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஏ.எஸ்.யு.எஸ். நிறுவனம்(ஏசஸ்) பல மாடல்களில் அதிக திறன் கொண்ட லேப்டாப்களை வெவ்வேறு துறையினரின் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்திஉள்ளது.

ஜென்புக் புரோ டியோ, ஜென்புக் டியோ, ஜென்புக் எடிஷன் 30 என்ற பெயரிலான லேப்டாப்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் தைபேயில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாடல் லேப்டாப்கள் தற்போது இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஏ.எஸ்.யு.எஸ். ஜென்புக் புரோ டியோ: இது 15.6 அங்குல திரையைக் கொண்ட லேப்டாப் ஆகும். இதில் 9-வது தலைமுறை இன்டெல் கோர் ஐ 99980 ஹெச்.கே. பிராசஸர் உள்ளது. வீடியோ கேம் விளையாட்டு பிரியர்களுக்கென இதில் நிவிட்யா ஜி.இ. போர்ஸ் ஆர்டிக்ஸ் 2060 ஜி.பி.யு. உள்ளது. 32 ஜி.பி. ரேம் மற்றும் 1 டி.பி. நினைவகம் கொண்டது. கீபோர்டின் பின்பகுதியில் ஒளிரும் தன்மை உள்ளது. இதில் வை-பை 6, புளூடூத் 5.0, தண்டர்போல்ட், 3 யு.எஸ்.பி. போர்ட், ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், உள்ளிட்டவை இந்த லேப்டாப்பில் இடம்பெற்றுள்ளன.

இதில் ஏ.எஸ்.யு.எஸ். நிறுவனத்தின் ஸ்டீரியோ ஆடியோ சிஸ்டம் உள்ளது. அத்துடன் அலெக்சா குரல்வழி உத்தரவுகளை நிறைவேற்றும் வசதி கொண்டது. இதில் விண்டோஸ் 10 புரோ பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள பேட்டரி ஏழரை மணி நேரம் தாக்குப்பிடிக்கும். இதன் எடை 2.5 கிலோவாகும். இதன் விலை ரூ.2,09,990 ஆகும்.

ஏ.எஸ்.யு.எஸ். ஜென்புக் டியோ: இது 14 அங்குல திரையைக்கொண்ட லேப்டாப். இதில் 10-வது தலைமுறை இன்டெல் கோர் ஐ 7 10510யு பிராசஸர் உள்ளது. நிவிட்யா ஜி.இ. போர்ஸ் எம்.எக்ஸ். 250 ஜி.பி.யு. உள்ளது. இதில் 8 ஜி.பி. ரேம் உள்ளது. 512 ஜி.பி. நினைவகம் உள்ளது. இதை 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்யலாம். இதில் மைக்ரோ எஸ்.டி. கார்டு ரீடர் உள்ளது. இதில் விண்டோஸ் 10 இயங்குதளம் உள்ளது. இதன் எடை 1.5 கிலோவாகும். விலை ரூ.89,990.

Next Story