வானவில் : கேம் பேடுடன் மோட்டரோலா


வானவில் :  கேம் பேடுடன் மோட்டரோலா
x
தினத்தந்தி 30 Oct 2019 9:48 AM GMT (Updated: 30 Oct 2019 9:48 AM GMT)

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மோட்டரோலா நிறுவனம் 75 அங்குல ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.

ஏற்கனவே இந்நிறுவனம் 43 அங்குல புல் ஹெச்.டி. டி.வி., 50 அங்குலம், 55 அங்குலம் மற்றும் 65 அங்குலங்களில் 4 கே டிஸ்பிளே கொண்ட டி.வி.யை அறிமுகம் செய்திருந்தது. தற்போது 75 அங்குலத்தில் வந்துள்ள ஸ்மார்ட் டி.வி. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் விளையாட்டு பிரியர்களுக்கான கேம்பேட் அதுவும் வயர்லெஸ் அடிப்படையில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் 4 கே ஐ.பி.எஸ். பேனல் உள்ளது. இது 178 டிகிரி கோணத்தில் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 1 கிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மாலி 450 குவாட் கோர் ஜி.பி.யு. பிராசஸர் உள்ளது. இதில் 2.25 ஜி.பி. ரேம் மற்றும் 16 ஜி.பி. நினைவக வசதியோடு வந்துள்ளது. மற்ற ஸ்மார்ட் டி.வி.க்களில் உள்ளதைப்போன்றே இதிலும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் உள்ளது.

இது நெட்பிளிக்ஸ், யூ-டியூப், ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ, கூகுள் செயலி இவற்றுடன் இணைக்க உதவும். இவற்றுக்கு ரிமோட்டில் தனி பொத்தான்கள் உள்ளது கூடுதல் சிறப்பாகும். அத்துடன் பிளே ஸ்டோரை பிரவுஸ் செய்யவும், பதிவிறக்கம் செய்யவும் வசதி உள்ளது. இதில் இரட்டை ஸ்பீக்கர் உள்ளது. இது 30 வாட் திறன் கொண்டது. இது டால்பி ஆடியோ மற்றும் டி.டி.எஸ். ட்ரூசவுண்ட் சிஸ்டமாகும். 3 ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், 2 யு.எஸ்.பி. போர்ட், ஒரு டிஜிட்டல் ஆடியோ அவுட்புட், ஆர்.எப். இணைப்பு வசதி ஆகியவற்றோடு ஆண்ட்ராய்டு டி.வி. கேம்பேட் உள்ளது. இதன் விலை ரூ.1,19,999 ஆகும்.

Next Story