சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : ஜாப்ரா பிரீவே புளூடூத் ஸ்பீக்கர் போன் + "||" + Rainbow: Jabra Freeway Bluetooth Speaker Phone

வானவில் : ஜாப்ரா பிரீவே புளூடூத் ஸ்பீக்கர் போன்

வானவில் :  ஜாப்ரா பிரீவே புளூடூத் ஸ்பீக்கர் போன்
ஆடியோ சார்ந்த பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜாப்ரா நிறுவனம் புளூடூத் ஸ்பீக்கருடன் இணைந்த போனை அறிமுகம் செய்துள்ளது.
கார்களில் பயணம் செய்வோருக்கு ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 3 ஸ்பீக்கர்கள் மிக இனிமையான இசையை உங்களுக்கு வழங்கும். அத்துடன் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளை நீங்கள் உங்கள் குரல் வழி உத்தரவு மூலம் இந்த ஸ்பீக்கர் போன் மூலம் உரையாடலாம். கார் ஓட்டும்போது எந்த சமயத்திலும் உங்கள் கவனம் சிதறாமல், கைகளால் போனை இயக்காமல் இந்த ஸ்பீக்கர் போன் மூலம் உரையாடலாம். பேசி முடித்தபிறகு இசையை கேட்டு மகிழலாம். ஜி.பி.எஸ். வழிகாட்டல் உதவியையும் தேர்வு செய்தால் இந்த ஸ்பீக்கர் போன் உங்களுக்கு வழிகாட்டும்.

இதை சார்ஜ் செய்தால் 14 மணி நேரம் செயல்படும். ஜி.பி.எஸ்., போட்காஸ்ட் ஆகியவற்றுக்கு மட்டும் பயன்படுத்தினால் 40 நாட்கள் வரை இது செயல்படும். ஆடியோ ஆன், ஆப் வசதி, 2 புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. போன் பேசும்போது பாடல் இசை மற்றும் வெளிப்புற இரைச்சல் உள்ளிட்டவற்றை முற்றிலுமாக நீக்கிவிடும்.

போன் பேசுவதை துல்லியமாக மறுமுனையில் இருப்பவர் கேட்பதற்கு இதில் இரண்டு மைக்குகள் உள்ளன. போன் பேசுவது மட்டுமின்றி, அழைப்பை துண்டிப்பது அல்லது மறுபடியும் அழைப்பை மேற்கொள்வது (ரீடயல்) உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. இதன் விலை சுமார் ரூ.24,000 ஆகும்.