சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : ஹயரின் அதி நவீன சலவை இயந்திரம் + "||" + Rainbow: Haier's sophisticated washing machine

வானவில் : ஹயரின் அதி நவீன சலவை இயந்திரம்

வானவில் :  ஹயரின் அதி நவீன சலவை இயந்திரம்
வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஹயர் ( Haier ) நிறுவனம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பிரன்ட் லோடிங் ஆட்டோமேடிக் வாஷிங் மெஷினை ( HW100-DM14876TNZP ) அறிமுகம் செய்துள்ளது.
இதில் டைரக்ட் மோஷன் மோட்டார் உள்ளது. அத்துடன் இதில் ஆன்டி பாக்டீரியல் தொழில்நுட்பம் பின்பற்றப்பட்டுள்ளது. இது துணிகளில் சேர்ந்துள்ள பூஞ்சைகள் உள்ளிட்டவற்றை நீக்கிவிடும். பாக்டீரியா தொற்று ஏற்படாதவாறு துணிகளை பாதுகாத்து உடலுக்கு நலன் தரும். 99.99 சதவீதம் இது பாக்டீரியாக்களை நீக்கிவிடும் அளவுக்கு இதில் கேஸ்கட் மற்றும் டிஸ்பென்சர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சலவையை மிகவும் தூய்மையானதாக்குகிறது.

இந்த சலவை இயந்திரத்துக்கு ஆயுள்கால உத்தரவாதத்தை இந்நிறுவனம் அளித்துள்ளது. இதனால் இயந்திரம் பழுது ஏற்பட்டால் இலவசமான சேவையை இந்நிறுவனம் அளிக்கும். பொதுவாக சலவை இயந்திரங்களுக்கு ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகள் வரை மட்டும்தான் நிறுவனங்கள் உத்தரவாதம் அளிக்கும். ஆனால் தங்கள் நிறுவனத் தயாரிப்பு மீதான அதிகபட்ச நம்பகத்தன்மை காரணமாக இந்த சலவை இயந்திரத்துக்கு ஆயுள்கால உத்தரவாதத்தை இந்நிறுவனம் அளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. டைரக்ட் மோஷன் மோட்டார் என்பது மோட்டாருடன் சலவை இயந்திரம் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளது. இது பெல்ட் மூலம் இணைக்கப்படவில்லை.

இதனால் இதன் செயல் திறன் கூடுதலாகும். துணி துவைக்கும் டிரம்முடன் மோட்டார் நேரடி சுழற்சியை அளிப்பதால் இது மிகச் சிறப்பாக செயல்படும். அத்துடன் குறைந்த மின் செலவில் சிறப்பாக செயல்படும் திறன் கொண்டது. மோட்டார் சுழற்சி மட்டுமே நேரடியாக உள்ளதால் இதிலிருந்து சத்தமே எழாது. வாஷிங்மெஷின் இயங்குவதே தெரியாத அளவுக்கு நிசப்தமாக இது செயல்படும். இதிலுள்ள துணி துவைக்கும் டிரம்மில் உள்ள துளைகள் லேசர் வெல்டிங் மூலம் உருவாக்கப்பட்டவை. இதனால் இது மிகச் சிறப்பாகச் செயலாற்றி அழுக்குகளை துல்லியமாக நீக்கிவிடும்.

இதில் இரட்டை ஸ்பிரே வசதி உள்ளது. இதனால் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டு துணிகளின் மீதான சோப்புகளை நீக்கிவிடும். மேலும் டிரம்களில் சலவைத் தூள் தங்காத அளவுக்கு சுத்தப்படுத்திவிடும். 8 கிலோ துணியைத் துவைக்கும் திறன் கொண்டதாக வந்துள்ள இந்த சலவை இயந்திரத்தின் விலை சுமார் ரூ.36,340 ஆகும்.