வானவில் : ஹூயாவெய் நிறுவனத்தின் ‘பேண்ட் 4’ மற்றும் ‘5 ஐ’ ஸ்மார்ட் வாட்சுகள்


வானவில் :  ஹூயாவெய் நிறுவனத்தின் ‘பேண்ட் 4’ மற்றும் ‘5 ஐ’ ஸ்மார்ட் வாட்சுகள்
x
தினத்தந்தி 30 Oct 2019 11:20 AM GMT (Updated: 30 Oct 2019 11:20 AM GMT)

சீனாவின் ஹூயாவெய் நிறுவனம் ‘பேண்ட் 4’ என்ற பெயரிலான ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகம் செய்துள்ளது.

இதன் விலை சுமார் ரூ. 2 ஆயிரமாகும். பார்ப்பதற்கு அழகிய தோற்றத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்வாட்ச் 0.96 அங்குல திரையைக் கொண்டது. இதன் எடை 24 கிராம் மட்டுமே. இதில் 9 வகையான விளையாட்டுகளின் செயல்பாடுகளில் உடலில் எந்த அளவுக்கு கலோரி கரைகிறது என்பதை துல்லியமாக தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவையும் இது காட்டும். இதில் ட்ரூ ஸ்கிரீன் தொழில்நுட்பம் உள்ளதால் 24 மணி நேரமும் இதய துடிப்பை கண்காணிக்கும் திறன் கொண்டதாக விளங்குகிறது. இதை சார்ஜ் செய்ய புதிய நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது.

இதற்கான யு.எஸ்.பி. சார்ஜரை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. நீர் புகா தன்மை கொண்டதால் நீச்சல் பயிற்சியின்போதும் இதைப் பயன்படுத்தலாம். இந்த கடிகாரத்தில் நினைவூட்டல் வசதியும் உள்ளது. ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுப்பதற்கு இந்த ஸ்மார்ட் வாட்ச்சை இயக்கினால் போதும். அத்துடன் ஸ்மார்ட்போன் இருக்குமிடத்தை அறியும் வசதி, அவசர அழைப்பு எண்ணை அழைத்தல் உள்ளிட்ட சிறப்பு வசதிகளும் உள்ளன.

இதில் 91 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இதனால் இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 9 நாட்கள் வரை செயல்படும். புளூடூத் 4.0 இணைப்பு வசதியோடு சிவப்பு, கருப்பு, வெள்ளை நிறங்களில் இது வந்துள்ளது.

‘5 ஐ’ ஸ்மார்ட் வாட்சுகள்
ஹூயாவெய் நிறுவனத்தின் துணை பிராண்டான ஹானர் பேண்ட் நிறுவனம் ‘5 ஐ’ ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகம் செய்துள்ளது. யு.எஸ்.பி.யில் சார்ஜ் செய்யும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதய துடிப்பை கண்காணிப்பது, தூக்கத்தை கண்காணிப்பது உள்ளிட்ட வசதிகளோடு நீர்புகா தன்மை கொண்டதாகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இதை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் முதல் 9 நாட்கள் வரை செயல்படும். முழுமையாக சார்ஜ் ஆக 1.30 மணி நேரம் போதுமானது. இதன் விலை சுமார் ரூ.1,600 ஆகும். கருப்பு, பிங்க், ஆலிவ் பச்சை நிறங்களில் இது வந்துள்ளது. இதன் திரை 0.96 அங்குலம் கொண்டதாக வந்துள்ளது. புளூடூத் வி4.2 இணைப்பு வசதி கொண்ட இந்த வாட்சு 24 கிராம் எடை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Next Story