சிறப்புக் கட்டுரைகள்

வியாபாரத்திற்கு புது யுக்தி + "||" + New strategy for business

வியாபாரத்திற்கு புது யுக்தி

வியாபாரத்திற்கு புது யுக்தி
டாவோபாவோ என்பது சீனாவின் ஆன்லைன் வர்த்தக நிறுவனம். ஆன்லைன் வர்த்த கத்தை அதிகரிக்கவும், அதனை அதிகமாகப் பயன்படுத்தும் ஆண்களைக் கவரவும் ஓர் யுக்தியைக் கையாண்டிருக்கிறது.
ஆன்லைன் மூலம் விற்பனையாகும் ஆப்பிள்கள் அனைத்தும் அழகான விமானப் பணிப் பெண்கள் முத்தமிட்ட ஆப்பிள்கள் என்று விளம்பரப்படுத்தி வருகிறது. ஓர் ஆப்பிள் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதுவரை 500 விமானப் பணிப்பெண்களுடன் ஆப்பிள்களை வைத்து புகைப்படங்கள் எடுத்துக்கொடுத்திருக் கிறார்கள். இந்த ஆப்பிள்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஒருபகுதி விமானப் போக்குவரத்துக் கல்லூரியின் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இன்னொரு பகுதி முதியோர் இல்லங்களுக்கு வழங்கப்படுகிறது. சீனாவின் பெண்ணிய அமைப்புகள் இந்த ஆப்பிள் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நினைத்தது போல ஆப்பிள் விற்பனை அவ்வளவு பிரமாதமாக இல்லை என்றும் சொல்கிறார்கள். நல்லது செய்வதற்காக என்றாலும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் இறங்கலாமா?