வானவில்: பேட்ரே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்


வானவில்: பேட்ரே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
x
தினத்தந்தி 6 Nov 2019 10:05 AM GMT (Updated: 6 Nov 2019 10:05 AM GMT)

இந்தியாவைச் சேர்ந்த பேட்டரியில் இயங்கும் வாகனங்களைத் தயாரிக்கும் பேட்ரே ( BattRE ) நிறுவனம் புதிய மாடல் ஸ்கூட்டர்களை தயாரித்துள்ளது.

ந்தியாவைச் சேர்ந்த பேட்டரியில் இயங்கும் வாகனங்களைத் தயாரிக்கும் பேட்ரே ( BattRE ) நிறுவனம் புதிய மாடல் ஸ்கூட்டர்களை தயாரித்துள்ளது. 48 வோல்ட் லித்தியம் அயன் பேட்டரியைக் கொண்ட இது மூன்று மணி நேரத்தில் முழு அளவு சார்ஜ் ஆகிவிடும். இதில் பிரஷ்லெஸ் டி.சி. மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆன்டிதெப்ட் அலாரம் அதாவது இந்த ஸ்கூட்டரை உரிமையாளர் தவிர வேறு யாரேனும் இயக்க முயன்றால் எச்சரிக்கை ஒலி எழுப்பும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இது தவிர யு.எஸ்.பி. சார்ஜிங் வசதி மற்றும் சாவி தேவைப்படாத ஸ்டார்ட் செய்யும் வசதியும் கொண்டது.

முகப்பு விளக்கு மட்டுமின்றி பின்புற விளக்குகளும் எல்.இ.டி.யால் ஒளிர்கிறது. ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர், டிஸ்க் பிரேக் வசதி கொண்டது. இதில் 10 அங்குல அலாய் சக்கரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.74 ஆயிரமாகும். மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திர மாநிலங்களில் மட்டுமே விற்பனையாகிவரும் இந்த ஸ்கூட்டர்கள் விரைவிலேயே நாடு முழுவதும் கிடைக்கும் வகையில் விநியோகஸ்தர்களை நியமித்துவருகிறது இந்நிறுவனம்.

Next Story