வானவில்: மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச்


வானவில்: மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச்
x
தினத்தந்தி 6 Nov 2019 10:56 AM GMT (Updated: 6 Nov 2019 10:56 AM GMT)

மோட்டோரோலா நிறுவனம் வட்ட வடிவிலான ஸ்மார்ட் வாட்ச்சை ‘மோட்டோ 360’ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

மோட்டோரோலா நிறுவனம் வட்ட வடிவிலான ஸ்மார்ட் வாட்ச்சை ‘மோட்டோ 360’ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் 2016-ம் ஆண்டுக்குப் பிறகு ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பை நிறுத்தியிருந்தது. தற்போது 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் இறங்கி உள்ளது. மோட்டோ 360 கைக்கடிகாரம் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தது. இது 1.2 அங்குல வட்ட வடிவிலானதாக உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டே இரண்டு பொத்தான்கள் (வழக்கமான கைக்கடிகாரத்தில் உள்ளதைப் போன்று) ஒட்டுமொத்த கடிகாரத்தின் செயல்பாடுகளை தீர்மானிப்பவையாக உள்ளன.

பெரிய அளவிலான பொத்தான் கடிகாரத்தின் இன்டர்பேஸ் செயல்பாடுகளைத் தேர்வு செய்ய உதவுகிறது. சிறிய அளவிலான பொத்தான் செயலியின் செயல்பாடுகளைத் தீர்மானிக்க உதவுகிறது. இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் வேர் 3100 பிராசஸர் உள்ளது. இது 1 ஜி.பி. ரேம் மற்றும் 8 ஜி.பி. நினைவக வசதி கொண்டதாக உள்ளது. கூகுள் இயங்குதளத்தைக் கொண்டுள்ளது.

என்.எப்.சி., ஜி.பி.எஸ்., இதய துடிப்பு கண்காணிப்பு உள்ளிட்ட வசதிகளும் இதில் உள்ளன. இதில் 355 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது. இது ஒரு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். இதன் விலை சுமார் ரூ.24,800 ஆகும். தற்போது அமெரிக்காவில் விற்பனையாகும் இந்த ஸ்மார்ட்வாட்ச் டிசம்பர் மாதம் முதல் இந்தியாவில் கிடைக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story