சிறப்புக் கட்டுரைகள்

வானவில்: ‘இன்ஸ்டன்ட் பாட் டியோ 60’ ஸ்மார்ட் குக்கர் + "||" + Instant pot duo 60 Smart cooker

வானவில்: ‘இன்ஸ்டன்ட் பாட் டியோ 60’ ஸ்மார்ட் குக்கர்

வானவில்: ‘இன்ஸ்டன்ட் பாட் டியோ 60’ ஸ்மார்ட் குக்கர்
அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டன்ட் பிராண்ட் இன்கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தியாவில் தனது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
மெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டன்ட் பிராண்ட் இன்கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தியாவில் தனது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக சமையலறை சாதனமான மின்சார குக்கரை அறிமுகப்படுத்திஉள்ளது. ‘இன்ஸ்டன்ட் பாட் டியோ 60’ என்ற பெயரிலான ஸ்மார்ட் குக்கரை அறிமுகம் செய்துள்ளது. 7 வகையான உணவுகளை சமைக்கும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. ரைஸ் குக்கர், ஸ்லோ குக்கர், பிரஷர் குக்கர், ஸ்டீமர், சாட், யோகர்ட் மேக்கர் மற்றும் வார்மர் என பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டது. வழக்கமான குக்கர்களை விட மிகக்குறைவான மின்சாரத்தில் இது செயல்படும்.

இதில் 13 வகையான உணவுகளை சமைப்பதற்கான முன்பதிவு செய்யப்பட்ட திட்டமுறைகள் (புரோகிராமிங்) உள்ளன. இதனால் அரிசி சாதம், ஓட்ஸ் மீட், பருப்பு சாதம், இட்லி உள்ளிட்ட அனைத்தையும் தயாரிக்க முடியும். இதன் கீழ்ப் பகுதி 3 அடுக்குகளைக் ( play bottom )கொண்டிருப்பதால் உள்ளிருக்கும் பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவுப் பொருள் எளிதில் ஒட்டாத தன்மையோடு இருக்கும். உணவுப் பொருட்களை தொடர்ந்து சூடாக வைத்திருப்பதற்கான கட்டுப்பாட்டு கருவியும் உள்ளது. இதனால் சுவை மாறாமல் சூடாக உணவுகளை சாப்பிட இது உதவும்.