பாகிஸ்தான் நாட்டிற்கான தேயிலை ஏற்றுமதி 50% சரிவு


பாகிஸ்தான் நாட்டிற்கான தேயிலை ஏற்றுமதி 50% சரிவு
x
தினத்தந்தி 7 Nov 2019 11:35 AM GMT (Updated: 7 Nov 2019 11:35 AM GMT)

நடப்பு ஆண்டின் முதல் 8 மாதங்களில் (2019 ஜனவரி-ஆகஸ்டு) பாகிஸ்தான் நாட்டிற்கான தேயிலை ஏற்றுமதி 50 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.

புதுடெல்லி

நடப்பு ஆண்டின் முதல் 8 மாதங்களில் (2019 ஜனவரி-ஆகஸ்டு) பாகிஸ்தான் நாட்டிற்கான தேயிலை ஏற்றுமதி 50 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.

இந்தியா 2-வது இடம்

சர்வதேச அளவில், தேயிலை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. உள்நாட்டில் தேயிலை உற்பத்தியில் அசாம் மாநிலம் 50 சதவீத பங்குடன் முதலிடத்தில் இருந்து வருகிறது. உயர்தர தேயிலையான ஆர்தோடக்ஸ் ஈராக், ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. சி.டி.சி. தேயிலை பெரும்பாலும் எகிப்து, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நடப்பு ஆண்டில் ஆகஸ்டு வரையிலான 8 மாதங்களில் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானிற்கு 31 லட்சம் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் அது 62 லட்சம் கிலோவாக இருந்தது. ஆக, ஏற்றுமதி 50 சதவீதம் குறைந்துள்ளது. இதே காலத்தில் ஐக்கிய அரபு குடியரசு நாடுகளுக்கு தேயிலை ஏற்றுமதி 38 சதவீதம் குறைந்து 37 லட்சம் கிலோவாக இருக்கிறது. கசகஸ்தான் நாட்டிற்கு 33 லட்சம் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

கென்யா

நம் நாட்டில் பயன்பாடு மிக அதிகமாக உள்ளதால் நம்மால் அதிக அளவு தேயிலையை ஏற்றுமதி செய்ய முடிவதில்லை. தேயிலை உற்பத்தியில் முன்னணி நாடுகளுள் ஒன்றான கென்யா அதன் மொத்த உற்பத்தியில் 95 சதவீதத்தை ஏற்றுமதி செய்கிறது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story