சிறப்புக் கட்டுரைகள்

பெண் காவலர்களும்.. குற்றங்களும்.. + "||" + Woman polices and crimes ..

பெண் காவலர்களும்.. குற்றங்களும்..

பெண் காவலர்களும்.. குற்றங்களும்..
காவல் துறையில் சேருவதற்கு பெண்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் காவல்துறையில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை 21 சதவீதம் உயர்ந்துள்ளது. 2017-ம் ஆண்டு பெண் போலீசாரின் எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரமாக இருந்தது. அது 2018-ம் ஆண்டில் 1 லட்சத்து 69 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்த தகவலை காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில் ஒட்டுமொத்தமாக காவல் துறையில் 8.73 சதவீதமே பெண் போலீசார் இருக்கிறார்கள். அதுவும் 2017-ம் ஆண்டு 7.28 சதவீதம் பெண் போலீசாரே இருந்திருக்கிறார்கள். நக்சலைட்டுகள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் காவல் துறையில் சேருவதற்கு பெண்களிடம் தயக்கம் இருக்கிறது. அந்த பகுதிகளில் 2.4 சதவீதமே பெண் போலீசார் பணிபுரிகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக ஜம்மு காஷ்மீர் பகுதியில் பெண் போலீசாரின் எண்ணிக்கை 3.5 சதவீதமாக இருக்கிறது.

காவல் துறையில் பெண் போலீசாரின் பங்களிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து காவல் நிலையங் களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதுஒரு புறம் இருக்க பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றன. 2015-ம் ஆண்டு பெண்களுக்கு எதிராக நாடு முழுவதும் 3.2 லட்சம் குற்ற வழக்குகள் பதிவானது. அது 2016-ம் ஆண்டு 3 லட்சத்து 38 ஆயிரத்து 954 ஆக உயர்ந்தது. 2017-ம் ஆண்டு பெண்களுக்கு எதிராக நடந்த குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 50 ஆயிரமாக அதிகரித்துள்ளது.