சென்ற வார இறுதியில் டாப் 10 நிறுவனங்களின் பங்கு விலை நிலவரம்


சென்ற வார இறுதியில் டாப் 10 நிறுவனங்களின் பங்கு விலை நிலவரம்
x
தினத்தந்தி 11 Nov 2019 6:08 AM GMT (Updated: 11 Nov 2019 6:08 AM GMT)

சென்ற வார இறுதியில், பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் டாப் 10 பட்டியலில் உள்ள நிறுவனங்களின் பங்கு விலை நிலவரம் வருமாறு:-

* ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை 0.92 சதவீதம் இறங்கி ரூ.1,445.35-ஆக இருந்தது.

* டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்கு விலை 2.54 சதவீதம் சரிவடைந்து ரூ.2,129.95-ல் நிலைகொண்டது.

* எச்.டீ.எப்.சி. வங்கிப் பங்கின் விலை 0.68 சதவீதம் குறைந்து ரூ.1,254.70-க்கு கைமாறியது.

* இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனப் பங்கு 2.41 சதவீதம் வீழ்ச்சி கண்டு ரூ.2,086.25-க்கு விலைபோனது.

* எச்.டீ.எப்.சி. நிறுவனப் பங்கின் விலை 0.91 சதவீதம் குறைந்து ரூ.2,230.45-க்கு கைமாறியது.

* ஐ.டி.சி. நிறுவனப் பங்கு விலை 2.05 சதவீதம் சரிந்து ரூ.260.45-ஆக இருந்தது.

* ஐசிஐசிஐ வங்கிப் பங்கின் விலை 2.25 சதவீதம் அதிகரித்து ரூ.489.45-ல் நிலைகொண்டது.

* கோட்டக் மகிந்திரா வங்கிப் பங்கு விலை 1.01 சதவீதம் உயர்ந்து ரூ.1,600.20-க்கு கைமாறியது.

* இன்போசிஸ் நிறுவனப் பங்கின் விலை 1.60 சதவீதம் குறைந்து ரூ.708.45-ல் நிலைபெற்றது.

* பாரத ஸ்டேட் வங்கிப் பங்கு விலை 0.72 சதவீதம் இறங்கி ரூ.315.85-ல் முடிவுற்றது.

Next Story