சிறப்புக் கட்டுரைகள்

மத்திய அரசுத்துறையில் பட்டதாரி பணிகளுக்கான தேர்வு + "||" + Selection for Graduate jobs in the Central Government Department

மத்திய அரசுத்துறையில் பட்டதாரி பணிகளுக்கான தேர்வு

மத்திய அரசுத்துறையில் பட்டதாரி பணிகளுக்கான தேர்வு
ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி.) அமைப்பு மத்திய அரசுத் துறைகளில் ஏற்படும் பல்வேறு அதிகாரி பணியிடங்களை நிரப்பும் ஒரு அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
தற்போது மத்திய வருவாய்த்துறை, பாராளுமன்ற செயலக சேவை, ரெயில்வே துறை, உள்துறை அமைச்சகம், நுண்ணறிவு பிரிவு, தேசிய புலனாய்வு அமைப்பு, சி.பி.ஐ., உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குரூப்-பி, குரூப்-சி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான பொது எழுத்து தேர்வை அறிவித்து உள்ளது. இதற்கான காலியிட விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது பற்றிய அறிவிப்பை விரைவில் எஸ்.எஸ்.சி. வெளியிட உள்ளது.

‘காம்பைன்டு கிராஜூவேட் லெவல் எக்சாம்-2019 (டையர்-1)’ எனப்படும் தேர்வு மூலம் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்தத் தேர்வு வருகிற மார்ச் மாதம் 2-ந்தேதி முதல்11 -ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சில பணிகளுக்கு 27 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 1-8-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது. ஓ.பி.சி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி:
பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சில பணிகளுக்கு பிளஸ்-2 வகுப்பில் கணித பாடத்தில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையத்தில் பார்க்கலாம்.

கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:
கணினி அடிப்படையிலான தேர்வு (டையர்-1, டையர் -2), விவரித்தல் தேர்வு (டையர்-3), திறமைத் தேர்வு, (டையர்-4) மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு உடல்தகுதி பரிசோதிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பம் சமர்ப்பிக்க முடியும். 25-11-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

இது பற்றிய விரிவான விவரங்களை www. ssc.nic.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.