நிதி நிலை முடிவுகள்


நிதி நிலை முடிவுகள்
x
தினத்தந்தி 12 Nov 2019 6:21 AM GMT (Updated: 12 Nov 2019 6:21 AM GMT)

இந்திய நிறுவனங்கள் நிதி நிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. முன்னணி நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சிப் புள்ளி விவரங்கள் வருமாறு:-

கேன்பின் ஹோம்ஸ்
கேன்பின் ஹோம்ஸ் நிறுவனம், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.98 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.82 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 20 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய் (ரூ.421 கோடியில் இருந்து) ரூ.500 கோடியாக உயர்ந்து இருக்கிறது.

ஜி.இ. பவர்
ஜி.இ. பவர் இந்தியா நிறுவனம், ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ரூ.22 கோடியை ஒட்டுமொத்த நிகர இழப்பாக கண்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இதன் லாபம் ரூ.5.20 கோடியாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் (ரூ.589 கோடியில் இருந்து) ரூ.545 கோடியாக குறைந்து இருக்கிறது.

வருண் பிவரேஜஸ்
வருண் பிவரேஜஸ் நிறுவனம், செப்டம்பர் காலாண்டில் ரூ.81 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.44 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 84 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் (ரூ.1,204 கோடியில் இருந்து) ரூ.1,776 கோடியாக அதிகரித்துள்ளது.

ஆபிள் இந்தியா
ஆபிள் இந்தியா நிறுவனம், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.15.58 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.10.3 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 51 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 42 சதவீதம் அதிகரித்து (ரூ.60 கோடியில் இருந்து) ரூ.85 கோடியாக உயர்ந்து இருக்கிறது.

பெர்ஜெர் பெயிண்ட்
பெர்ஜெர் பெயிண்ட் நிறுவனம், ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ரூ.194 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.116 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 67 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 7.2 சதவீதம் அதிகரித்து (ரூ.1,490 கோடியில் இருந்து) ரூ.1,598 கோடியாக உயர்ந்து இருக்கிறது.

நடப்பு நிதி ஆண்டில், செப்டம்பர் வரையிலான முதல் 6 மாதங்களில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.371 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.250 கோடியாக இருந்தது. இதே காலத்தில் இதன் வருவாய் (ரூ.2,973 கோடியில் இருந்து) ரூ.3,315 கோடியாக அதிகரித்துள்ளது.

Next Story