சிறப்புக் கட்டுரைகள்

அமர ராஜா பேட்டரீஸ் லாபம் ரூ.219 கோடி + "||" + Amara Raja Batteries profit is Rs 219 crore

அமர ராஜா பேட்டரீஸ் லாபம் ரூ.219 கோடி

அமர ராஜா பேட்டரீஸ் லாபம் ரூ.219 கோடி
அமர ராஜா பேட்டரீஸ் நிறுவனம், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.219 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது.
சென்ற ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.120 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 82 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் 3 சதவீதம் சரிந்து (ரூ.1,753 கோடியில் இருந்து) ரூ.1,695 கோடியாக குறைந்து இருக்கிறது.

மும்பை பங்குச்சந்தையில், கடந்த திங்கள்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது அமர ராஜா பேட்டரீஸ் பங்கு ரூ.676-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.729.75-க்கு சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.718.30-ல் நிலைகொண்டது. இது, சென்ற வார இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 9.83 சதவீத ஏற்றமாகும்.