ரூ.400 கோடி செலவில், கிருஷ்ணப்பட்டினம் துறைமுகத்தில் சமையல் எரிவாயு இறக்குமதி முனையத்தை என்.ஜி.சி. எனர்ஜி இந்தியா நிறுவுகிறது


ரூ.400 கோடி செலவில், கிருஷ்ணப்பட்டினம் துறைமுகத்தில் சமையல் எரிவாயு இறக்குமதி முனையத்தை என்.ஜி.சி. எனர்ஜி இந்தியா நிறுவுகிறது
x
தினத்தந்தி 13 Nov 2019 9:39 AM GMT (Updated: 13 Nov 2019 9:39 AM GMT)

என்.ஜி.சி. எனர்ஜி இந்தியா நிறுவனம் கிருஷ்ணப்பட்டினம் துறைமுகத்தில் ரூ.400 கோடி செலவில் சமையல் எரிவாயு (எல்.பி.ஜி) இறக்குமதி முனையம் ஒன்றை நிறுவுகிறது.

ஓமனைச் சேர்ந்த நேஷனல் காஸ் கம்பெனி மற்றும் சிங்கப்பூரில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் பெட்ரெடெக் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் என்.ஜி.சி. எனர்ஜி இந்தியா ஆகும். இந்நிறுவனம் கிருஷ்ணப்பட்டினம் துறைமுகத்தில் சமையல் எரிவாயு இறக்குமதி மற்றும் சேமிப்பிற்கான முனையம் ஒன்றை அமைக்க உள்ளது. இது 30,000 டன் கொள்ளளவு கொண்டதாக இருக்கும். இதற்காக இந்நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்ய உள்ளது.

என்.ஜி.சி. எனர்ஜி இந்தியா நிறுவனம் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கும், சேமிப்பதற்கும் இந்த முனையத்தைப் பயன்படுத்த உள்ளதாக அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story