சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : புதுப் பொலிவில் பஜாஜ் பல்சர் 150 நியோன் + "||" + Vanavil : Bajaj Pulsar 150 Neon with new beauty

வானவில் : புதுப் பொலிவில் பஜாஜ் பல்சர் 150 நியோன்

வானவில் : புதுப் பொலிவில் பஜாஜ் பல்சர் 150 நியோன்
பஜாஜ் நிறுவனத் தயாரிப்புகளில் இளைஞர்களின் அபிமான மோட்டார் சைக்கிள் பல்சர்தான். இந்த மாடலில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் குறைந்த குதிரைத் திறன் முதல் அதிகபட்ச குதிரைத் திறன் கொண்ட மாடல் வரை தொடர்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது பஜாஜ்.
பெரும் வரவேற்பைப் இவை அனைத்துமே பெறுவதுதான் இந்த மோட்டார் சைக்கிளின் பெருமையாகும். இதில் மேம்படுத்தப்பட்ட ரகமாக நியோன் வந்துள்ளது. ஏற்கனவே உள்ள 150 பல்சரில் உள்ளதை விட பல மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

பல்சரில் வெவ்வேறு குதிரைத் திறன் கொண்ட பைக்குகள் வந்தாலும் அவற்றை எளிதில் அடையாளம் காண முடியாது. அனைத்துமே ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டிருப்பதுதான் அதற்கு முக்கியக் காரணம். தற்போது வெளிப்படையாக கண்டுபிடிக்கும் வகையில் சில மாறுதல்களை செய்துள்ளது பஜாஜ். அந்த வரிசையில் 150 நியோன் மாடலில் பெட்ரோல் டேங்க் சற்று வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இது 149.5 சி.சி. திறன் ஏர் கூல்டு ஒற்றை சிலிண்டர் என்ஜினை கொண்டது. 13.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும், 13.8 ஹெச்.பி. திறனை யும் கொண்டதாகும். இதில் 5 கியர்கள் உள்ளன. டெலஸ்கோப்பிக் போர்க், அலாய் சக்கரம், மோனோஷாக் அப்சார்பர் இவை அனைத்தும் மாற்றம் இன்றி அப்படியே தொடர்கின்றன.

இந்த மாடல் டி.வி.எஸ். அபாச்சே ஆர்.டி.ஆர்.160 மாடலுக்கு போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது. பஜாஜ் பல்சார் 150 நியோன் விலை எவ்வித மாற்றமுமின்றி அதே விலையில் (சுமார் ரூ.75,200) கிடைக்கும்.