சர்வதேச அளவில்,ஜகுவார்-லேண்டு ரோவர் கார்கள் விற்பனை 6 சதவீதம் சரிந்தது


சர்வதேச அளவில்,ஜகுவார்-லேண்டு ரோவர் கார்கள் விற்பனை 6 சதவீதம் சரிந்தது
x
தினத்தந்தி 13 Nov 2019 10:29 AM GMT (Updated: 13 Nov 2019 10:29 AM GMT)

சர்வதேச அளவில் ஜகுவார்-லேண்டு ரோவர் சொகுசு கார்கள் விற்பனை 6 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், உலக அளவில், அக்டோபர் மாதத்தில் மொத்தம் 41,866 ஜகுவார்-லேண்டு ரோவர் (ஜே.எல்.ஆர்) கார்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 6 சதவீத சரிவாகும். இதில் லேண்டு ரோவர் விற்பனை 2.4 சதவீதம் உயர்ந்து 31,260-ஆக இருக்கிறது. ஜகுவார் விற்பனை 23 சதவீதம் சரிவடைந்து 10,606-ஆக உள்ளது. மொத்தத்தில் ஜே.எல்.ஆர். விற்பனை 41,866 கார்களாக உள்ளது.

மும்பை பங்குச்சந்தையில், கடந்த திங்கள்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது டாட்டா மோட்டார்ஸ் நிறுவனப் பங்கு ரூ.169.90-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.172.90-க்கும், குறைந்தபட்சமாக ரூ.169.25-க்கும் சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.172-ல் நிலைகொண்டது. இது, சென்ற வார இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 1.68 சதவீத ஏற்றமாகும்.

Next Story