உள்நாட்டில், அக்டோபர் மாதத்தில் மோட்டார் வாகனங்கள் விற்பனை 13% சரிவடைந்தது


உள்நாட்டில், அக்டோபர் மாதத்தில் மோட்டார் வாகனங்கள் விற்பனை 13% சரிவடைந்தது
x
தினத்தந்தி 14 Nov 2019 12:27 PM GMT (Updated: 14 Nov 2019 12:27 PM GMT)

உள்நாட்டில், அக்டோபர் மாதத்தில் மோட்டார் வாகனங்கள் விற்பனை 13 சதவீதம் சரிவடைந்துள்ளதாக இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

தொடர் சரிவு

கடந்த பல மாதங்களாகவே மோட்டார் வாகனங் கள் விற்பனை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் கார், பைக் உள்ளிட்ட அனைத்து வகையான மோட்டார் வாகனங்களின் விற்பனை, ஒட்டுமொத்த அளவில் 22 சதவீதத்திற்கு மேல் குறைந்து 20,04,932-ஆக இருந்தது.

அக்டோபர் மாதத்தில் பயணிகள் வாகனங்கள், இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து மோட்டார் வாகனங்களின் விற்பனை, ஒட்டுமொத்த அளவில் 21,76,136-ஆக உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 24,94,345-ஆக இருந்தது. ஆக, விற்பனை ஏறக்குறைய 13 சதவீதம் குறைந்துள்ளது.

அக்டோபர் மாதத்தில் 2,85,027 பயணிகள் வாகனங்கள் விற்பனை ஆகி இருந்தது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 2,84,223-ஆக இருந்தது. ஆக, விற்பனை 0.28 சதவீதம் மட்டும் உயர்ந்து இருக்கிறது. வர்த்தக வாகனங்கள் விற்பனை 23 சதவீதம் சரிவடைந்து (87,067-ல் இருந்து) 66,773-ஆக குறைந்துள்ளது. இரு சக்கர வாகனங்கள் விற்பனை 14 சதவீதம் குறைந்து (20,53,497-ல் இருந்து) 17,57,264-ஆக சரிவடைந்து இருக்கிறது. மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 3.60 சதவீதம் சரிந்து (69,483-ல் இருந்து) 66,985-ஆக குறைந்துள்ளது.

இவ்வாறு சியாம் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

உற்பத்தி குறைப்பு

விற்பனை சரிவால் வாகனத்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் உற்பத்தி குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. உதாரணமாக அக்டோபர் மாதத்தில் மாருதி நிறுவனம் மொத்தம் 1,19,337 வாகனங்களை மட்டுமே தயாரித்துள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 1,50,497-ஆக இருந்தது. ஆக உற்பத்தி சுமார் 21 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக அதன் உற்பத்தி குறைக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story