‘‘பள்ளிக்கூடமும் நடத்துகிறோம், டிஜிட்டல் கல்வியும் போதிக்கிறோம்’’ பேஸ்புக் நிறுவனரின் மனைவி சொல்கிறார்


‘‘பள்ளிக்கூடமும் நடத்துகிறோம், டிஜிட்டல் கல்வியும் போதிக்கிறோம்’’ பேஸ்புக் நிறுவனரின் மனைவி சொல்கிறார்
x
தினத்தந்தி 16 Nov 2019 2:15 AM GMT (Updated: 15 Nov 2019 1:37 PM GMT)

பேஸ்புக் நிறுவனர் மார்க் சுகர்பெர்கின் மனைவி பிரிசில்லா ஷான், கடந்த சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவின் இரு இடங்களில் இலவச பள்ளிகளை கட்டி, நிர்வகித்து வருகிறார். இவை இரண்டும், அமெரிக்காவில் அதிகளவில் குற்றங்கள் நடைபெறும் நகரில் அமைந்திருக்கிறது. எதற்காக இந்த முயற்சி என்பதை பிரிசில்லா விளக்குகிறார்.


பள்ளிக்கூடம் தொடங்கியதற்கான காரணம் என்ன?

பேஸ்புக் நிறுவனர் மார்க்கின் மனைவி என்ற தகுதிக்கு முன்பாகவே நான் ஒரு ஆசிரியர் என்ற தகுதியை அடைந்துவிட்டேன். மார்க் அவரது காதலை என்னிடம் வெளிப்படுத்தியபோது, ‘‘நான் திருமணத்திற்கு பிறகும் பணியாற்றுவேன். அதில் உங்களுக்கு சம்மதமா?’’ என்பதை தெளிவுப்படுத்திய பிறகே திருமணத்திற்கு ஒப்புக்கொண்டேன். அன்று அவர் கொடுத்த வாக்கை, இன்றும் கடைப்பிடிக்கிறார். அதனால்தான் நான் திடீரென ஆசிரியர் அவதாரம் எடுத்தேன்.

ஆசிரியராக பணியாற்ற வேண்டிய தேவை என்ன?

எல்லா சந்தோஷங்களையும் பணத்தை கொண்டு வாங்கிவிட முடியாது. வகுப்பறையில் தூங்கும் குழந்தைகளையும், அதை சமாளிக்க அவர்கள் அளந்து விடும் கதைகளையும் வேறு எங்கு அனுபவிக்கமுடியும் சொல்லுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசை இருக்கும். அந்தவகையில் வகுப்பறையில் ஆசிரியராக இருப்பதுதான் என்னுடைய ஆசை.

குற்றம் அதிகம் நடக்கும் பகுதியில் பள்ளிக்கூடம் அமைத்திருப்பதை பற்றி கூறுங்கள்?

இது மார்க்கின் முடிவு. நான் பள்ளிக்கூடம் தொடங்க இருப்பதை பற்றி கூறியதும் மார்க்தான், அல்டோ பகுதியில் தொடங்க சொன்னார். ஏனெனில் அப்பகுதி மக் களுக்கு கல்வி சரிவர கிடைப்பதில்லை. அப்பகுதி குழந்தைகளை வேறு பள்ளி களிலும் சேர்த்து கொள்வதில்லை. அதனால்தான் மார்க்கின் அறிவுரைப்படி, அங்கு பள்ளியை தொடங்கினோம்.

பேஸ்புக் மாணவர்களின் கல்வியை பாதிப்பதாக நிறைய ஆசிரியர்கள் குறைகூறுகிறார்கள். ஆசிரியராக உங்களது கருத்து என்ன?

எல்லா விரல்களும் ஒன்றுப்போல் இருக்காது. அதேபோலதான் நாம் எப்படி பயன்படுத்துகிறோம், எதை பயன்படுத்துகிறோம் என்பதை கருத்தில் கொண்டுதான் இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியும். பேஸ்புக்கில் அறிவியல் விஷயங்களும் இருக்கிறது. ஆபாச கருத்துகளும் இருக்கிறது. இவ்விரண்டில் நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதை கொண்டே, பேஸ்புக் வரமா? இல்லை சாபமா? என்பதை கூறமுடியும். எங்கள் பள்ளியில் புத்தக பாடத்திட்டமும் இருக்கிறது. பேஸ்புக் பாடத்திட்டமும் இருக்கிறது. பள்ளிக்கூடமும் நடத்துகிறோம், டிஜிட்டல் கல்வியை போதிக்கும் பள்ளிக்கூடமும் நடத்துகிறோம். அந்தவகையில் ஒரு ஆசிரியராக பேஸ்புக் மிகவும் பயன்படுகிறது. நாங்கள் பேஸ்புக்கின் வரபிரசாதங்களை மட்டுமே அனுபவிக்கிறோம். தேவையில்லாத விஷயங்களில் தலையை நுழைப்பது இல்லை.

உங்களுடைய அடுத்தக்கட்ட திட்டம் என்ன?

பள்ளிக்கூடம் தொடங்கி கல்வி வழங்கி வருகிறோம். இங்கு பயிலும் மாணவர் களுக்கு ஆரோக்கிய உணவும் வழங்குகிறோம். வெகு விரைவில் இலவச மருத்துவ மனையையும், ஆரோக்கிய உணவு கூடத்தையும் அமைத்து, மக்களுக்கு ஆரோக்கியத்தை வழங்குவதே என்னுடைய லட்சியமாக இருக்கிறது.

Next Story