சிறப்புக் கட்டுரைகள்

வங்கியில் சிறப்பு அதிகாரி பணிகள் + "||" + Special officer functions in the bank

வங்கியில் சிறப்பு அதிகாரி பணிகள்

வங்கியில் சிறப்பு அதிகாரி பணிகள்
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்டிரல் பேங்க் ஆப் இந்தியாவில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 74 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஐ.டி., செக்யூரிட்டி ஆபீசர், ரிஸ்க் மேனேஜர், பினான்சியல் அனலிஸ்ட், கிரெடிட் ஆபீசர், எக்னாமிஸ்ட், சீப் டேட்டா சயின்டிஸ்ட், டேட்டா ஆர்கிடெக்ட், சி.ஏ. உள்ளிட்ட பிரிவில் பணியிடங்கள் உள்ளன.

எம்.பி.ஏ., சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., போன்ற முதுநிலை பட்டப்படிப்பு, பி.இ., பி.டெக் மற்றும் இதர பட்டப்படிப்பு படித்து குறிப்பிட்ட பணி அனுபவம் உள்ளவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறு படுகிறது. அதிகபட்சம் 45 வயதுடையவர் களுக்கும் பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். நவம்பர் 21-ந்தேதி விண்ணப்பிக்க கடைச நாளாகும். ரூ.550 கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான ஆன்லைன் தேர்வு டிசம்பர் 21-ந்தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றிய விரிவான விவரங்களை https://www.centralbank.net.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.