சிறப்புக் கட்டுரைகள்

வானவில்: புதிய ஹீரோ ஸ்பிளெண்டர் ஐ-ஸ்மார்ட் + "||" + Vanavil : New Hero Splendor I-Smart

வானவில்: புதிய ஹீரோ ஸ்பிளெண்டர் ஐ-ஸ்மார்ட்

வானவில்:  புதிய ஹீரோ ஸ்பிளெண்டர் ஐ-ஸ்மார்ட்
ஹீரோ நிறுவனம் தனது பிரபல மாடலான ஸ்பிளெண்டரில் பாரத் புகை விதி 6-ஐ (பி.எஸ்.6) பூர்த்தி செய்யும் வகையிலான புதிய ஐ-ஸ்மார்ட் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.64,900 ஆகும்.
 முந்தைய மாடலைக் காட்டிலும் இதன் விலை ரூ.7,470 அதிகமாகும். இதில் புகை விதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் வகையில் புதிய என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது தவிர சில சிறிய மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

புதிய என்ஜின் 113.2 சி.சி. ஒற்றை சிலிண்டர், பியூயல் இன்ஜெக்டட் தன்மை கொண்டது. முந்தைய மாடல்கள் அனைத்தும் 109.15 சி.சி. ஆகும். இப்புதிய மாடலில் சி.சி. திறனும் அதிகம். ஆனால் ஹெச்.பி. திறன் 9.5-லிருந்து 9.1 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது 5,500 ஆர்.பி.எம். வேகத்தில் 9.89 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியது.

இதில் புதிய டயமண்ட் பிரேம் உள்ளது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 165 மி.மீ. -லிருந்து 180 மி.மீ. ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் முகப்பு விளக்கின் ஒளி அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய மாடல் நிறுவனத்தின் விற்பனை சந்தையை மேலும் அதிகரிக்கும் என்று இந்நிறுவனம் உறுதியாக நம்புகிறது.