சிறப்புக் கட்டுரைகள்

நெய் தரும் அழகு + "||" + The ghee as given the beauty

நெய் தரும் அழகு

நெய் தரும் அழகு
உணவுக்கு சுவை சேர்ப்பதற்கு மட்டுமின்றி சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கும் நெய்யை பயன்படுத்தலாம். முடி உதிர்தல், பொடுகு போன்ற பிரச்சினையில் இருந்து காப்பதோடு கூந்தல் வளர்ச்சிக்கும் நெய் உதவுகிறது.
ஆரோக்கியமான கூந்தலுக்கு ஈரப்பதம் அவசியமானது. போதிய ஈரப்பதமின்றி உலர்ந்த நிலையிலோ, பொலிவின்றி மந்தமாகவோ காட்சியளிக்கும் கூந்தல் அதிக சேதமடைய வாய்ப்புள்ளது. 

நெய்யை கொண்டு கூந்தலுக்கும், உச்சந்தலைக்கும் மசாஜ் செய்யலாம். அது மயிர் கால்களின் செயல்பாட்டை தூண்டி, முடி வளர சாதகமான சூழலை உருவாக்கும். கூந்தலுக்கும் வலு சேர்த்து முடி உதிர்வதை தடுக்கும். உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும். 

நெய்யில் வைட்டமின் ஏ, இ ஆகியவை கலந்திருக்கிறது. அவை கூந்தலின் வளர்ச்சிக்கு துணைபுரியும். குளிர்காலத்தில் பொதுவாக பொடுகு பிரச்சினை தலைதூக்கும். அதற்கும் நெய் தீர்வு தரும்.

இதுகுறித்து பிரபல சரும டாக்டர் ஷெரின் புர்டடோ கூறுகையில், ‘‘கூந்தலில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்வதற்கும், நீண்ட கூந்தல் வளர்ச்சிக்கும் நெய்யை பயன்படுத்தலாம். 

குறிப்பாக சுருள் முடி கூந்தல் கொண்டவர்கள் ஈரப்பதத்துக்கு ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கலந்து தலையில் தேய்த்து மசாஜ் செய்து கால் மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்பு சல்பேட் கலக்காத ஷாம்பு, கண்டிஷனர் கொண்டு கூந்தலை அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்தால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்’’ என்கிறார்.

நெய்யை நன்றாக உருக்கி உச்சந்தலையில் தேய்த்தும் மசாஜ் செய்யலாம். அது கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஆசிரியரின் தேர்வுகள்...