வானவில்: நீல நிறத்தில் ரெட்மி நோட் 8 புரோ


வானவில்: நீல நிறத்தில் ரெட்மி நோட் 8 புரோ
x
தினத்தந்தி 11 Dec 2019 11:04 AM GMT (Updated: 11 Dec 2019 11:04 AM GMT)

கடந்த மாதம் பச்சை, வெள்ளை, கருப்பு நிறங்களில் ரெட்மி நோட் 8 புரோ ஸ்மார்ட்போனை ஜியோமி நிறுவனம் அறிமுகம் செய்தது.

தற்போது கண்ணைக் கவரும் வகையில் நீல நிற மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.14,999 ஆகும். இது 6.53 அங்குல திரையைக் கொண்டது. இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி.90டி பிராசஸர் உள்ளது. அது தவிர ஸ்மார்ட்போன் விரைவில் சூடாவதைத் தடுக்கும் வகையில் இதில் லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் பின்பற்றப்பட்டுள்ளது.

இது ஸ்மார்ட்போனின் வெப்பத்தை 4 டிகிரி முதல் 6 டிகிரி வரை குறைக்க உதவுகிறது. இதில் 64 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. செல்பி பிரியர்களுக்கென முன்புறத்தில் 20 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இதன் நான்கு முனைகளிலும் 3 டி கண்ணாடி வளைவு உள்ளது. இதில் 4,500 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரியும், விரைவாக சார்ஜ் ஆக 18 வாட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

Next Story