சிறப்புக் கட்டுரைகள்

வானவில்: ஹூயாவெய் ஜி.டி. 2 ஸ்மார்ட் கைக்கடிகாரம் + "||" + Vanavil : Huawei GT 2 Smart wristwatch

வானவில்: ஹூயாவெய் ஜி.டி. 2 ஸ்மார்ட் கைக்கடிகாரம்

வானவில்: ஹூயாவெய் ஜி.டி. 2 ஸ்மார்ட் கைக்கடிகாரம்
மின்னணு சாதன உற்பத்தியில் சர்வதேச அளவில் முன்னணியில் திகழும் சீனாவைச் சேர்ந்த ஹூயாவெய் நிறுவனம் புதிய ரக ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது.
ஜி.டி.2 என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த கடிகாரத்தின் விலை சுமார் ரூ.14,990 ஆகும். இந்த ஸ்மார்ட் கடிகாரம் ஒருமுறை சார்ஜ் செய்தால் 14 நாட்கள் வரை செயல்படும். புளூடூத் இணைப்பு, மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கரைக் கொண்டது. இதில் 500 பாடல்கள் வரை பதிவு செய்து கொள்ளும் வகையில் நினைவக வசதி உள்ளது. இது 42 மி.மீ. மற்றும் 46 மி.மீ. அளவுகளில் அமோலெட் திரை மற்றும் 3டி கண்ணாடியுடன் வந்துள்ளது.

இதில் ஹூயாவெய் நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற கிரின் ஏ1 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது புளூடூத் இணைப்பு வசதியை மேம்படுத்தும். 15 வகையான விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்ப செயல்படக் கூடியது.

குறிப்பாக ஓட்டம், நடைப் பயிற்சி, மலையேற்றம், சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபடும்போது உங்கள் உடலில் எந்த அளவுக்கு கலோரி எரிக்கப்படுகிறது என்பதை துல்லியமாகக் காட்டும். இதய துடிப்பையும் இது துல்லியமாக அளவிடக் கூடியது. அத்துடன் உங்களது தூக்க செயல்பாடுகளையும் கண்காணிக்கும். உங்களது தூக்கம் தடைபட்டால் அதையும் இது அறிவுறுத்தும். நீர்புகா தன்மை கொண்டது. இதன் எடை 29 கிராம் மட்டுமே.

ஆக்சிலரோ மீட்டர், கைராஸ்கோப் சென்சார், ஜியோமேக்னெடிக் சென்சார், ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார், போதிய வெளிச்சம் தரும் சென்சார், காற்று வீசும் வேகத்தை உணர்த்தும் சென்சார் ஆகியன இதில் உள்ளன. இதில் ஸ்போர்ட் மாடல் விலை சுமார் ரூ.15,990. லெதர் ஸ்டிராப் உள்ள மாடல் விலை ரூ. 17,990. உலோக ஸ்டிராப் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.21,990 ஆகும்.

ஆசிரியரின் தேர்வுகள்...