சிறப்புக் கட்டுரைகள்

வானவில்: நோக்கியா 55 அங்குல ஸ்மார்ட் டி.வி. + "||" + Vanavil : Nokia 55-inch Smart TV

வானவில்: நோக்கியா 55 அங்குல ஸ்மார்ட் டி.வி.

வானவில்: நோக்கியா 55 அங்குல ஸ்மார்ட் டி.வி.
செல்போன் உற்பத்தியில் முன்னணியில் திகழும் நோக்கியா நிறுவனம் தற்போது ஸ்மார்ட் டி.வி. தயாரிப்பில் இறங்கியுள்ளது. முதலாவதாக 55 அங்குல 4-கே ரெசல்யூஷன் கொண்ட ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.
 ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்த டி.வி.க்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. மிகச் சிறப்பான இசையை வழங்க 24 வாட் ஸ்பீக்கர்கள் இதில் உள்ளன. இதில் ஒரு கிகா ஹெர்ட்ஸ் எக்ஸ் குவாய் கோர் கோர்டெக்ஸ் ஏ53 பிராசஸர்கள் உள்ளன. 2.25 ஜி.பி. ரேம் மற்றும் 16 ஜி.பி. நினைவகம் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம் உள்ளது. வை-பை, புளூடூத், 2 யு.எஸ்.பி. மற்றும் எதர்நெட் வசதிகள் உள்ளன. இதன் விலை சுமார் ரூ.41,999 ஆகும். விரைவிலேயே பல்வேறு அளவுகளிலான ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்ய நோக்கியா திட்டமிட்டுள்ளது.